பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை நூற்றிஐம்பது

363


அம்முழுமதிக்கு அணித்தாக இருக்கும் கார்முகிலை ஒத்திருக்க, அக்கூந்தலில் அணியப்பட்ட, நூலால் கட்டப்பெற்ற, தேன் மிகுதியால் ஈரம்பட்ருக்கும் மலர்கள், உன் பின்னலுக்கு ஒப்பாகும் சரும்பாம்பிடத்தே கிடக்கும், கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டங்களுக்கு ஒப்பு ஆக,"

"அணிமுகம் மதியேய்ப்ப, அம்மதியை தனியேய்க்கும்
மணிமுக மாமழை நின்பின் ஒப்பம், பின்னின்கண்
வரிநுண்ணுால் சுற்றய ஈரிதழ்அலரி

அரவுக்கண் அணிஉறழ் ஆரல்மீன் தகைஒப்பு:"
- குறிஞ்சிக்கலி : 28 : 1 - 4:

மொம்மை யானைகள் பிணிக்கப்பட்ட பொம்மைத் தேர்களைச் சிறு பிள்ளைகள் ஈர்க்கும் சிறுதேர் உருட்டல், பழம் பாடல்கள் அனைத்திலும் இடம் பெற்றுள்ளது. ஆனால், மருதக்கவி பாடிய மருதன் இளநாகனார், அதைப், பாத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு திரிவான் ஒருவனின் மனைவி வாய் வழியாக நன்கு பயன் கொண்டுள்ளார்:" உன்னிடத்தில் அன்பைக் கைவிடுவார் கைவிட்டொழிக ; உன்பால் கொண்ட, என்கண் நிறைந்த அன்பு மாறுத, உன்னைப்பெற்ற யான், உன் வருகையைக் காணுமாறு அருள்செய்யும், மெல்லிய, தலையிடத்தே, ஒளி விடும் மூன்று முத்து படங்களை அணிந்து கொண்டிருக்கும் பாகனாகிய என் மகனே! விளிம்பில், ஒளிவீசும் முத்துக்களை அரும்பு போல் அழுத்திப் பவழத்தால் செய்யப் பெற்ற வட்டப் பவகையைச் சுமந்து நிற்கும் உணவு உட்கொள்ளுதல் அறியாத, கையால் அழகுறப்பண்ணப்பட்ட யானையை, உன் காவில் கட்டிய கெச்சையின் உள்ளிடு மணிகள், ஒலித்து ஆரவாரம் செய்ய, முப்புரியாக முறுக்கிய கயிற்றால் மெல்ல மெல்ல ஈர்த்துக் கொண்டு என்பால் வருவாயாக. ஒளிவீசும் மணிகள் ஒலிக்க ஒலிக்க, அசைந்து, அசைந்து தளர் நடையிட்டு நீ நடப்பதைக் காண்பது எனக்குக் களிப்பூட்டுகிறது : ஆனால், உன் தந்தைபால், எங்கள் உள்ள மெல்லாம் உன் மேலதே என்றுகூறி அன்பு கொண்டு,-பின் உன் தந்தையால் கைவிடப்பட்டு, கைவளை நெகிழுமாறு: