பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364

தமிழர் வரலாறு


மெலிந்து வருந்தும் மகளிரைக் காண்பது எனக்குக் கலக்கம் தருகிறது."

"நயந்தலை மாறுவார் மாறுக ; மாறாக்
கயந்தலை மின்னும் கதிர்விடு முக்காழ்ப்
பயந்த எம்கண்ணார யாம்கான நல்கித்
திகழ்ஒளி முத்தம் கரும்பாகத் தைஇப்
பவழம் புனைந்த பருதி சுமப்பக்
வேழம் அறியாநின் கைபுனை வேழம்
புரிபுனை பூங்கயிற்றில் பைபய வாங்கி,
அரிபுனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே
வருக ! எம் பாக மகன் :
கிளர்மனி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும்
தளர் தடை காண்டல் இனிது : மற்று இன்னாதே,
உளம் என்னா நுந்தைமாட்டு எவ்வம் உழப்பார்

வளைநெகிழ்பு யாம் காணுங்கால்"
-மருதக்கவி : 15 : 1-13;

அடுத்து கூறப்படும் மாலைப் போதின் வருணனை, நெய்தற்கலி பாடியவரும், கலித்தொகையைத் தொகுத்த வரும் ஆகிய நல்லந்துவனார் பாடியது : "தன்மீது பகை கொண்டு வந்த மல்லர்களின் மறத்தைக் கெடுத்து அழித்த, மலர்ந்த குளிர்ந்த மாலை அணிந்த மார்பையுடைய மாயவன், பகைவரெல்லாம் ஒன்று திரண்டு வந்து உருத்துத் தன்மீது பாய்ந்தமையால், அவர்மீது சினம் கொண்டு, அவர்கள் தோற்று ஓடுமாறு, அவர்கள் ஊர்ந்து வந்த யானைப்படையின் மீது பாய்ச்சிய சக்கரப் படைபோல, ஞாயிறு, தான்பிரித்த கதிர்களை மீண்டும் தன்னகத்தே ஒடுக்கிக் கொண்டு மேற்கு மலையை அடைந்து மறைந்து போக, பரந்தகடலில் ஓதக்காற்று மிகவே, எழுகின்ற அலைநீரெல்லாம் கரையை அடைய, கழியிடத்து, மலர்களை விடுத்து வண்டுகள் போங் விடவே, பொலிவிழந்து போன, துறைகளிடத்துக், கயத்து