பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368

தமிழர் வரலாறு


நாம் அணிந்த அணிகலனெல்லாம், தாமே கழன்று விழுமாறு நம் உடல் மெலிய தம்மைப் பிரித்து சென்று வருத்துவான் மலையாயிருந்தும் அதன் பக்கமலைகளில், மழை மேகத் திடையே நுழைவும் முழுமதிபோல், தேனடைக் கட்டிகள் காட்சி தருகின்றனவே! என்ன காரணம் எனத் தோழி, தலைவனைப் பழித்துப் பாடினாள்.

தோழி இவ்வாறு பழிக்கவே சினங்கொண்ட தலைவி, ஏடி! தலைவனை இவ்வாறு, ஓயாது பழிக்காதே! என் உள்ளத்தைத் தன் அன்பால் கவர்ந்து கொண்டவன் அவன்: மற்றவரெல்லாம் செய்ய அஞ்சும் கொடுந்தொழிலுக்கு அஞ்சாத அறநெறி இழந்தவன் அல்லன் நம் தலைவன்" என்த் தலைவனைப் புகழ்ந்து பாடினாள்.

"காணிய வா, வாழி ! தோழி வரைத்தாழ்பு,
வான்நிறம் கொண்ட அருவித்தே, நம்அருளா
நாண்இலி நாட்டுமலை:
ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ
ஓர்வுற்று ஒருதிறம் ஒல்காத நேர்கோல்
அறம்புரி நெஞ்சத்தவன் ?
தணநறுங் கோங்கம் மலர்ந்த வரையெல்லாம்
பொன்அணி யானைபோல் தோன்றுமே, தம்அருனான்
கொன்னாளின் நாட்டுமலை
கூறுநோய் ஏய்ப்ப விடுவானோ, தன்மலை
நீரிலும் சாயல் உடையன், நயந்தோர்க்குத்
தேர் ஈயும் வண்கையவன் ?
வரைமிசை மேல்தொடுத்த நெய்க்கண் இறுஅல்
மழைநுழை திங்கள்போல் தோன்றும், இழைநெகிழ
எவ்வம் உறீஇ யினான்குன்று

எஞ்சாது எல்லா! கொடுமை நுவலாதி,