பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை நூற்றிஐம்பது

369

அஞ்சுவது அஞ்சா அறவிலி அல்லன், என்

நெஞ்சம் பிணி கொண்டவன்."
-குறிஞ்சிக்கவி : 6 : 10 - 27

ஏறுதழுவல்

சோழன் நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலியுள், மேய்புலமாம் முல்லைநிலத்துப் பழம் பெரும் வழக்கமாம் ஏறுதழுவலும், அவ்வீர விளையாட்டில் வெற்றி பெறுவோரையே தம் கணவராகத் நேர்ந்தெடுக்கும் பழக்கமும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அதை விளக்கும் பல பாடல்களுள் இதோ ஓர் எடுத்துக் காட்டு : "ஆனிரை பல உடையராகிய ஆயர்குலத்து அடலேறுகள், மெல்விய கொத்துக்களைக் கொண்ட கொன்றை, மெல்லிய காயாம்பூ, சின்னம் சிறு இலைகளைக் கொண்ட வெட்சி, பிடவம், முல்லை, கஞ்சங்குல்லை, குருந்தம், கோடல், பாங்கர் முதலாம் மலர்களால் ஆன தலைமாலை அணிந்து, விரைந்து வந்து ஏறுதழுவுதலைக் காணவேண்டி, முல்லை அரும்பும் மயிற்பீலியின் அடியும் போலும் பல்லும், பெரிய, குளிர்ந்த கண்ணும், மடப்பம் தொளிக்கும் சொல்லும், ஒளிவீசும் பொன்னால் பண்ணப்பட்ட மகரக்குழை அணிந்த காதும் உடைய ஆயர்மகளிர் வந்து பரணில் இடங்கொண்டனர். அவ்வாறு அவர்கள் இடங்கொண்டதும், மணிகள் நிறைந்த மலையிலிருந்து உருண்டோடி வீழும் வெள்ளருவிகள் போல, அழகின் எல்லையைக் கடந்த, வெள்ளிய கால்களைக் கொண்ட கருநிறக் காரியாகிய ஏற்றினையும், விண்மீன்கள் ஒளிகாட்டும் அந்திக் காலத்துச் செவ்வானம் போல, அழகொளி வீசும் வெண்புள்ளிகள் நிறைந்த சிவந்த ஏற்றினையும், அழிக்கும் தொழிலோனாம் சிவன் அணிந்த இளம்பிறை போல் வளைந்த கொம்புகளைக் கொண்ட சிவந்த ஏற்றினையும், போரிடும் வெறியும் அதற்கேற்ற வலியும் உடைய பிற ஏறுகள் பலவற்றையும், ஆயர், தொழுவினுள் விடவே, ஏறுகள் எழுப்பிய புழுதிப்படலம் படர்ந்த அத்தொழு, சிங்கமும்,

த.வ.II-24