பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை நூற்றிஐம்பது

371


தழுவி வருந்தி, அதன் மேல் தோன்றி வரும் இப் பொதுவன் அழகைக் காண், அக்காட்சி என் நெஞ்சையே நடுங்கப் பண்ணுகிறது என்றாள் தோழி. சிவப்பும், கறுப்புமான புள்ளிகள் செறிந்த, வலிமை மிக்க வெள்ளேற்றின் மீது பாய்ந்து, வெண்திங்களில் படிந்திருக்கும் மாசுபோல தழுவிக் கிடக்கும் ஆட்டினத்து ஆயர்குல இளைஞன் ஆற்றலைக் காணாய், என மற்றொருவனைக் காட்டினாள் தோழி. கஞ்சன் முதலிய பகைவரால் அனுப்பப்பட்ட, பிடரியையுடைய குதிரையைக் கையால் அடித்து வாயைப் பிளந்து போட்ட அன்றைய கண்ணனும், இவன் போன்றவன் தான் போலும் எனப் பலரும் கூறுமாறு, கொடிய கோபத்தோடு கருத்து ஓடி வந்து, தன் மேலே பாய்ந்த சிவந்த காளையின் இரு கொம்புகளையும் பற்றிக்கொண்டு அதன் வலியை அழித்த, காயாம்பூ மலரால் ஆன தலைமாலை அணிந்திருக்கும் இவ்விளையோன் அழகையும் ஆற்றலையும் காண். அவன் ஆற்றல் கண்டு என் நெஞ்சு நடுநடுங்கிப் போய் விட்டது என்றாள் தோழி."

"மெல் இணர்க் கொன்றையும், மென்மலர்க் காயாவும்,
புல் இலை வெட்சியும், பிடவும், தளவும்,
குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்
கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர்
பல்லான் பொதுவர் கதழ்விடை கோட்காண்பார்
முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன
பல்லர், பெருமழைக்கண்ணர், மடம் சேர்ந்த
சொல்லர், சுடரும் கனங்குழைக் காதினர்,
நல்லவர் கொண்டார் மிசை,
அவர் மிடை கொள,
மணிவரை மருங்கின் அருவிபோல
அணிவரம் பறுத்த வெண்கால் காரியும்,

மீன்பூத்து அவிர்வரும் அந்திவான் விசும்பு போல்