பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை நூற்றிஐம்பது

373

சீற்றமோடு ஆருயிர் கொண்ட ஞான்று இன்னன் கொல்
கூற்று என உட்கிற்று என் நெஞ்சு:

இகுளை! இஃதொன்று கண்டை; இஃதொத்தன்
புல்லினத்து ஆயர் மகன் அன்றே? புள்ளி
வெறுத்த வய வெள்ளேற்று அம்புடைத், திங்கள்
மறுப்போல் பொருந்தியவன்.

ஓவா வேகமோடு உருத்துத் தன்மேல் சென்ற
சேஎச் செவிமுதல் கொண்டு பெயர்த்து ஒற்றும்
காயாம்பூக் கண்ணிப் பொதுவன் தகைகண்டை, !
மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை
வாய்பகுத் திட்டுப் புடைத்த ஞான்று இன்னன் கொல்

மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு."
-முல்லைக்கலி : 3 : 1-55;

பாட்டின் காலம் :

கலித்தொகைப் பாக்கள் மூன்றில், கொற்கையும், மதுரையும், பெயர் குறிப்பிடப் பெறாத பாண்டியனும், பொருளோ, தொடர்போ இன்றிக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதுவும், கலித்தொகையில் ஆரியக் கருத்துக்களின் நுழைவு மிகப் பலவாம் நிலைமையும், கலித்தொகைப் பாடல்கள் அனைத்தும் கி. பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதை உணர்த்துகின்றன. அந்த நூற்றாண்டில், ஆரிய நாகரீகம் செல்வாக்கான ஓர் இடத்தைப் பிடித்துக்கொள்ள, பழந்தமிழ் வாழ்க்கை முறை மறையத் தொடங்கிவிட்டது, அல்லது மக்கள் வாழ்வில் இரண்டாம் இடத்திற்குச் சென்று விட்டது; ஆரியக் கதைகள், தமிழ்க் கடவுள்களைச் சுற்றிக் கூறப்படலாயின : சமயங்களுக்கு இடையில் ஆன சமரச