பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374

தமிழர் வரலாறு


உணர்வு உச்ச நிலையை அடைந்தது. ஆரியப் பழக்கவழக்கங்களும்கூட, தமிழ்ப் பழக்க வழக்கங்களோடு கலந்து விட்டன: அது போலவே மூடநம்பிக்கைகளும். மதுரை நாடு, ஒரு வகை அரசியல் அமைதி இன்மைக்கு ஆளாகி இருந்தது: களப்பிரர்களும், பாண்டியர்களும், ஆட்சி உரிமை காணப் போராடிக் கொண்டிருந்தனர். ஆகவேதான், புலவர்களைப் பேணும் புரவலர்களாம் அரசர்களின் பெயர் கூறிப் பாராட்டும் பழம் பாக்கள் போல் அல்லாமல், கலித்தொகை, பாண்டிய அரசர்களைப் பெயர் சுட்டாமல் தெளிவின்றிக் குறிப்பிட்டுள்ளது.