பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376

தமிழர் வரலாறு

குன்றம், திருமாலிருஞ்சோலைக் கோயில்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. இது வரை அறிந்த புலவர்களின் பெயர்கள், அவை ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதை உணர்த்துகின்றன. இது, இப்பாடல்களில் உள்ள கணக்கிலா ஆரியக் குறிப்புக்களாலும், சமஸ்கிருதச் சொற்களாலும் உறுதி செய்யப்படுகிறது. இவற்றிற்கான பண்ணும் இசையும் பிற்காலத்தவரால் வகுக்கப்பட்டுள்ளன.

திங்களாம் வான் கோளின் ஒளிமறைப்பின் போதைய வான் பற்றிய வருணனை, இதன் பதினொன்றாவது பாடவில் வருவது, வான நூல் கணக்குப்படி, இப்பாடல் பாடப்பெற்ற காலத்தை அறியும் முயற்சியில் பயன்படுத்தப் பட்டது. ஆனால், உண்மைக்கு மாறான, தேவை இல்லாத தற்புனைவுகள் இல்லாமல், காலத்தைக் கண்டு அறிவதற்கு, மூலத்தில் காணப்படும் செய்தி போதுமானதன்று; ஆகவே, அம்முயற்சி தோல்வி கண்டுவிட்டது. உரையாசிரியர் தரும் விளக்கம், உள்ள குழப்பத்தைப் பெருங்குழப்பமாக்கி விட்டது.

பரிபாடல் புலவர்கள் மதுரை மாவட்டத்தவராவர். இது அவர் தம் பாடற்பொருள்களிலிருந்து பெறப்படும். அவர்கள் தம் பாடற் பொருளாம் கடவுள்களின் அருள் ஒன்றினாலேயே அமைதி கண்டனர்.

பதினெண் கீழ்க்கணக்கு :

பதினெட்டு நூல்களைக் கொண்ட கீழ்க்கணக்கு, எட்டுத் தொகைப் பத்துப்பத்துப் பாட்டின் தொகையாம் மேல் கணக்கோடு மாறுபட்டுளது. இப்பதினெட்டுநூல்களும், கி. பி. 6 முதல் 8 வரையான காலத்தில் பாடப் பெற்றனவாம்; பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் . நாலடியாரின் இரு பாடல்களில், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த முத்தரையர் குலத்தலைவன் ஒருவன் குறிப்பிடப்பட்டுள்ளான: இந்நூல்கள் மூவகைப்படும்: 1) செங்கணான் என அழைக்கப்படும் ஒரு சோழ அரசன் போர்க்களத்தில் பெற்ற வெற்றியைப் பாடுகிறது ஒரு நூல்.