பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378

தமிழர் வரலாறு

குறுந்தொடர் மூலம் இதில் கூறப்பட்டிருக்கும் உயர்ந்த அறநெறிகளால் ஈர்க்கப்பட்டு விட்டனர். ஐரோப்பியத் தமிழ்ப் பேராசிரியர்களில் தலை சிறந்தவராகிய பெச்சிப் பாதிரியார், ‘திருவள்ளுவர் ஒருபுறச்சமயி என்ற காரணத்தால் நரகிற்குச் சென்றிருப்பினும், முதுமொழியாம் மணிக் குறள்களைப் பாடிய அவர் நரகிற்குச் சென்றிருக்க இயலாது’ எனக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. பல்வேறு மொழிகளிலான அதன் மொழிபெயர்ப்புக்கள், அது குறித்துக் கேள்விப்பட்டவர் அனைவர்க்கும், அதை நன்கு அறிந்த ஒன்றாக ஆக்கி விட்டதனால், உலக மக்கள் அனைவரின் பாராட்டையும் ஒரு மிக்க பெற்றிருப்பதால், அதன் பாக்கள் கொண்டிருக்கும் கருத்துக்கள் பற்றிய திறனாய்வு ஈண்டுத் தேவையில்லை :

இந்நூலின் குறட்பா வடிவம், போலி விஞ்ஞானப் பொருள் பற்றிய சமஸ்கிருத எழுத்தாளர்களின் சூத்ர மாதிரியினை வெற்றிகரமாகப் பின்பற்றியுளது. சமஸ்கிருத சூத்திரங்கள் உரைநடையில் அமைந்திருக்க, குறள் வெண்பாக்கள், இலக்கிய நடையில் இருப்பதால், அவற்றிலும் சிறந்தனவாம். செய்யுள் நடை, இறுக்கமான கட்டுக்கோப்பில் அமைந்துளது. ஒழுக்க நெறிகளை அடுக்கடுக்காக எடுத்துக் கூறும் நிலையில் ஏற்படும் கவர்ச்சியிலா வரட்சியினைப் போக்க, இங்குமங்குமாக, இலக்கிய நயங்களையும் புகுத்திபுள்ளார் ஆசிரியர், கலைவாணர்கள், செய்யுள்களுக்கே உரிய ஆட்சி எல்லைக்குள், அறிவுரை வழங்கும் பாக்கள் நுழைவை எப்போதும் எதிர்த்தே நிற்பர். ஆனால், நனி மிகு சிறப்பு வாய்ந்த செய்யுள் நடை அமைப்பும், நல்லொழுக்க அறிவுரைகள். உண்மையான செய்யுள் உணர்வுகளால், அவ்வப்போது ஒளியூட்டப் பெறுவதும், நீதி போதனைப் பாக்களையும், செய்யுட்களாம் என ஏற்றுக் கொள்ளப் படுவதை நியாயப்படுத்துமாயின். திருக்குறளும் ஒரு சிறந்த செய்யுளே. இங்கொன்றும் அங்கொன்றுமாக எடுக்கப்பட்ட சில எடுத்துக் காட்டுக்களே, இதை உறுதி செய்யும் :