பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன் . 29

குலமகளிரோடு இருந்து, வட்டவடிவில் பல படையாகக் கட்டப்பட்ட மதில்களால் குழப்பட்ட வேள்விச்சாலையில், பருந்து வடிவமாகச் செய்யப்பட்ட, இடத்தில் நாட்டியயூபமாகிய நெடிய கம்பத்தில் வேதத்தால் சொல்லப்பட்ட முறைப்படி வேள்வியினைச் செய்துமுடித்து’.

                         அறம் அறக்கண்ட நெறிமாண் அவையத்து 
                         முறை நற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த 
                         தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு 
                         பருதி உருவின் பல்படைப் புரிசை 
                         எருவை நுகர்ச்சி யூப நெடுந்துாண் 
                         வேத வேள்வித் தொழில்முடித் ததூ உம்’
                                                        - புறநானூறு: 284 : 4.5

கரிகாலன் எரியோம்பலை ஆதரித்ததைப் பிற்கால அரசர்களும் பின்பற்றுதல்:

    கரிகாலனால் தொடங்கப்பட்ட வேதயக்குங்களுக்கு ஆதரவு தரும் பாணி, ஏனைய தமிழ்ரசர்களாலும் விரைவில் பின்பற்றப்பட்டது. சேர அரசர்களில் பல்யானைச்செல் கெழுகுட்டுவன், பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தால் தன்னைப் பாடிய புலவர் பாலைக் கெளதமனாரும், அவர் மனைவியும், யாக முடிவில் நேரே சுவர்க்கம் புகுவதற்காம் யாகத்தைச் செய்யத் துணை புரிந்தான் எனப் பிற்கால்ச் காதுவழிச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளான். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய அரசன் பல யாகங்களைச் செய்தார் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வழக்கிற்ரு உரிய பொருளாகி பண்டு தானம் பெற்றவனின் வழிவந்தவர்க்கே இம்முறை செப்புசாஸனம் தொடர, மீண்டும் வழங்கப்பட்ட நிலங்களை இப் பல் யாகசாலை முதுகுடுமி, ஒரு பிராமண வேள்வியாசிரியனுக்கு தானமாக அளித்தான். கரிகாலனின் வழிவந்த பெருநற்கிள்ளி என்பானொருவன், வேதமுறைகளின்படி முடிசூட்டிக் கொண்ட