பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியஙகள்

383

மட்டுமே போதுமான இடம் உடையதாகச் சுருங்கிவிட்டது. அப்புலவர்கள் குளத்தில் வீழ்ந்து மூழ்கிவிட்டனர். எழுந்து கரை ஏறியதும், குறளின் புகழ் கூறும் ஒவ்வொரு பாடலை, ஒவ்வொருவரும் பாடினர். அப்பாக்கள் அனைத்தும் ஒரு தொகை நூலாகத், “திருவள்ளுவ மாலை’ என்ற பெயரில் தொகுக்கப்பெற்று வழக்கமாகத் திருக்குறளைத் தொடர்ந்து அச்சிடவும் பெறுகிறது, அக்கட்டுக்கதையின் பொருத்தமிலாக் கூற்றில் ஒன்று. குறுகிய நோக்குடையவர்களாகிய அச்சங்கப் புலவர்களுள் சிவனையும் சேர்த்திருப்பது திருவள்ளுவமாலை பாடிய புலவர்களுள் பல்வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்த புலவரெல்லாம் உள்ளனர். உ-ம். மாங்குடி மருதனார், உருத்திரங் கண்ணனார், பாரதம் பாடிய பெருந்தேவனார், கவிசாகர பெருந்தேவனார், நரிவெரூஉத்தலையார், குலபதி நாயனார் மற்றும் சமஸ்கிருதப் பெயர் தாங்கியவர்களும், தமிழ்ப் பெயர் தாங்கியவர்களுமாக ஐம்பத்தி மூவர். ஆரிய மயமாகிவிட்ட பல்லவ நாடாம் தொலை நாட்டிலிருந்து வந்த புலவர் மீதும், ஆரிய நாகரீகத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் இலக்கிய உலகில் ஒரு புது மரபினை நுழைக்கும் ஒரு நூலின் மீதும் பழந்தமிழ் மரபு காக்கும் புலவர்கள் கொண்ட பொறாமை ஒன்றே. இக்கட்டுக் கதைகளின் பருப்பொருளாம்:

சமஸ்கிருத இலக்கியத்திற்குக் குறள்பட்டிருக்கும் கடன்:

இப்பத்தி, சென்னை பல்கலைக் கழக வரலாற்றுத் துறை விரிவுரையாளரும், திருவள்ளுவரின் சமஸ்கிருத மூலங்கள் அனைத்தையும் குறிப்பிடும் ஒரு சிறு வெளியீட்டினை வெளியிட எண்ணியிருப்பவுருமாகிய திரு. பி. ஆர். ஆர். தீக்ஷதர் அவர்கள் தந்தது.

குறளாசிரியர் சமஸ்கிருத மொழிப் பேரறிஞராவர்; நீதி, அர்த்த சாஸ்திரங்களைச் சிறப்பாக ஆராய்ந்தவராவர் என்பது தெளிவு. குறட்பாக்களை, அப்பொருளே குறிக்கும் சமஸ்கிருத எழுத்தாளர்களால், ஆரியத் தெய்வீக நூல்களாம் புருஷார்த்தங்களால் திருவள்ளுவர் எந்த அளவு இயக்கப்