பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

235

தமிழர் வரலாறு


“ஆமை தன் ஐந்து உறுப்புக்களையும், தன் ஒட்டுக் குள்ளே அடக்கிக் கொள்வது போல், தன் ஐம்புலன்களை, அவற்றின் ஆசைகளிலிருந்து அடக்கிக் கொள்பவன் எவனோ, அவனுக்குப் பேரின்பம் வந்து வாய்க்கும்” என்கிறது பகவத் கீதை:

‘யதா சம்ஹரதெ சாயம் கூர்மொங்காநீவ ஸர்வலஹ

இந்திரியா ஹீந்திரியார் தேப்ய தஸ்ய ப்ரஞா ப்ரதிஷ்டிதா.”
பகவத்கீதை : 2 : 58;

“தன் உடம்பை வளர்த்துக்கொள்ளுதல்பொருட்டு தான் மற்றொரு விலங்கின் உடம்பைத் தின்பவன், அருளை எவ்வாறு காப்பான்” எனக் கேட்கிறது குறள்.

“தன்ஊன் பெருக்கற்குத், தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?” --குறள் : 251

“பிற உயிர்களின் ஊனைத் தென்புலத்தார்க்கும் தெய்வங்களுக்கும் பலிப்பொருளாகத் தருவது தவிர்த்துத் தன் உடல் ஊனை வளர்ப்பதற்கு விரும்புபவன் ஒழுக்க நலம் இல்லாதவனாவன்” என்கிறது மனு.


“ஸ்வமாம்ஸம் பரமாம்ஸேன வர்த்ஹயி துமிக்சதி

அனப்யர்ச்ய பித்றன் தெவாஸ்த தொன்யொ நாஸ்த்ய புண்யக்ற்த்
- மனு : 5 ; 52.

“ஒருவனிடமிருந்து காமம், வெகுளி, மயக்கம் என்ற இக்குற்றங்கள் மூன்றின் பெயருங்கூட அறியாதவாறு கெட்டொழியுமாயின், அவற்றால் அவனுக்கு வர இருக்கும் நோய்கள் இல்லாமல் போகும்’ என்கிறது குறள்.

“காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின்
நாமக் கெடக்கெடும் நோய்” --குறள் : 360;