பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

387

‘’அனைத்து ஆசைகளையும் விட்டு, காமம், கோபம், மயக்கம் ஆகியவற்றின் நீங்கிய வாழ்வு நடத்துகின்றவன் பேரின்பப் பெருவாழ்வு அடைவான்‘’ என்கிறது. கீதை,

“விஹாய காமான்யஹ் சர்வான் புமான்சரதி நித்ய ஸ் ஹ்
நீர்மமொ நிரஹன்காரஹ் ஸ சாந்திமதி கச்சதி,‘’
-கீதை 2 ; 71.

‘’ஓர் அரசனுக்குத் தேவைப்படுவனவாகிய படை, குடிமக்கள், உணவு, அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறு அங்கங்களையும் குறைவறக் கொண்டிருக்கும் அரசன், அரசர்களுளெல்லாம் ஆண்சிங்கம் போன்றவன் ஆவன்’ என்கிறது . குறள்:

‘’படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.”
-குறள்: 381

.

அர்த்த சாஸ்திரம், ஒரு நாட்டின் இன்றியமையா உறுப்புக்களாக, அரசன் உள்ளிட்டு ஆறு குறிப்பிடுகிறது: அரசன் நீங்கிய அந்த ஆறு அமைச்சு, நாடு, அரண், படை, தட்பு, உணவு இவையாம்.

‘’ஸ்வாம்ய மாத்ய ஜனபத துர்க கொஸ்தண்ட மித்ராணி‘’
-அர்த்தசாஸ்திரம் : நூல்: 6 பகுதி : 1,

எடுத்த வினையை முடித்தற்பொருட்டுத் தம் நிலைமையோடு பொருந்தாதனவற்றைச் செய்வராயின், உலகத்தவர், அவற்றை ஏற்றுக்கொள்ளாது பழிப்பர். ஆகவே உலகம் பழிக்காதனவற்றை ஆராய்ந்து செய்தல் வேண்டும்? என்கிறது குறள்.

“எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் : தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு‘’
-குறள் : 470

.

“ஒரு பணியைத் தொடங்கும் முன்னர், அப்பணியின் திட்டம், அதைச் செயலாற்றும் செயல்முறை ஆகியவற்றை