பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

393

“ஆரியப் படை கடந்த” என்ற தொடர், கும்பகோணத்துக்கு அண்மையில் உள்ள பழைய போர்க்களமாம் ஆரியம் படை என்ற ஊரைக்கடந்து என்றும் பொருள் தரும் எனினும், அக்கட்டுரை ஆசிரியர், வடக்கே உள்ள ஆரியர்களின் படைகளை வென்று எனும் பொருளே தரும்வகையில், “வட ஆரியர் படைகடந்து” எனக் கொண்டுள்ளார்.

முதலாவது, இரண்டாவது காண்டங்கள்.

சிலப்பதிகாரம், புகார், மதுரை, வஞ்சி ஆகிய இம்மூன்று நகரங்களிலும் முறையே நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கூறும் மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுளது. ஆனால், முதல் இரண்டு காண்டங்கள் மட்டுமே, முடிந்த நூலினை உருவாக்கி உள்ளன. சிலப்பதிகாரம் என்ற சொல்லின் பொருள், சிலம்பு குறித்த நூல் என்பதாம். வாணிபத்துக்காம் முதலீட்டுக்காக, மனைவியின் காற்சிலம்பை விற்க முடிவு செய்து, ஆனால், மதுரை மன்னனால் திருட்டுக்குற்றம் சாட்டப் பெற்றுக் கொலைசெய்யப்பட்ட முற்போக்கு ஊதாரியாம் கோவலன், அதனால் கடுஞ்சினம் கொண்டு மன்னனையும் சபித்து, தன்முலையில் ஒன்றைத் திருகி எறிந்து, மதுரை மாநகரை எரித்து அழித்த மனைவி கண்ணகி ஆகியோர் கதிையினைக் கூறுகிறது சிலப்பதிகாரம். அதன் பின்னர், கணவனும் மனைவியும் வானுலகு அடைகின்றனர். இக் கதை முதல் இரு காண்டங்களில் கூறப்பட்டுள்து; ஆகவே, அவ்விரு காண்டங்களேமுற்றுப் பெற்றமுழு நூலாக ஆகிவிடுகின்றன. இரண்டாம் காண்ட இறுதியில், கணவனும், மனைவியும் மண்ணுவகை விட்டே போய் விடுகின்றனர் : சிலம்பின் கதையும் முடிந்து விடுகிறது; அதன் பின்னர், அவ்வணி குறித்து எதையும் கேட்டிலம். ஆகவே, சிலப்பதிகாரம் என்ற பெயர், முதல் இரு காண்டங்களுக்கு, மட்டுமே பொருந்தும். அவ்விரு காண்டங்களும், உலகப் பெருங்காப்பியங்களுள், தனி சிறந்த தலையாய காப்பியம் ஒன்றை உருவாக்கி விடுத்துள்ளன. கதை, அளவுக்கு மீறிய நயத்தோடு கூறப்பட்டுளது. இயற்கைக் காட்சிகள், மக்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை விளக்கும் முறை,