பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394

தமிழர் வரலாறு

வியப்பூட்டும் வகையில் நனி சிறப்பானது. ஆங்காங்கு வரும் உரையாடல்கள் உணர்ச்சிகரமானவை. நூலாசிரியர் காலத்தில் வழக்கில் இருந்த அரசர்கள் குறித்த கட்டுக் கதைகள், நூலிலிருந்து விலக்கப் படவில்லை என்றாலும், சமஸ்கிருத வடிவமைப்புக்களால் புதையுண்டு போகாத் தமிழ்ச் செய்யும் மரபுகளின் ஆற்றல் துணையால், காவியத்தின் நல்ல கட்டத்தில், கடவுளர் குறுக்கீட்டால், நெருக்கடி தீரவைக்குள் முறை, அறவே காணப்படவில்லை ; நம்புதற்கியலாத் திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளை, மனம் போன போக்கில் நுழைக்க முனையும் காவிய ஆசிரியர்களின் இயல்பும் நன்கு கட்டுப்பட்டுளது. காவியத் தலைவர்கள் அனைவரும் எளிய பொது மக்கள்: அந்நூலின் பொது மக்கள் நலம், இயற்கை நிலைகடந்த நிகழ்ச்சிகளின் இடை துழைவால், ஒளிகுன்றச் செய்யப்படவில்லை. ஆகவே, இக்காவியம், சில நிலைகளில், இராமாயணம், இழந்த சொர்க்கம் போலும் காவியங்களினும் நனிசிறப்பு வாய்ந்தது.

மூன்றாம் காண்டம் :

மூன்றாம் காண்டமாகிய வஞ்சிக் காண்டம், சேரன் செங்குட்டுவன் என்ற அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவன் பெருமை, அவனுடைய வட நாட்டுப் படையெடுப்பு ஆகியன பற்றிக் கூறுகிறது. வடநாட்டுப் படையெடுப்பின் நோக்கம், கண்ணகி சிலைக்கான கல்லை இமயத்திலிருந்து கொண்டு வருவதாக ஆக்கப்படுவதன் மூலமும், ஆரிய தமிழ் மரபு வழிபாடுகள் தொடர, கண்ணகிக்குப் பெருமை செய்ய, அச்சிலை நிறுவப்பட்ட திகழ்ச்சியைத் தொல்காப்பியப் பொருளதிகாரம் வகுக்கும் விதி முறைகளையொட்டி விளக்கிக் கூறுவதன் மூலமும், முதல் இரு காண்டங்களுடனான தொடர்பு மேற்கொள்ளப்பட்டுளது.

காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்.”

—தொல்: பொருள்:-60 : 19-20;