பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

399


படும் கண்ணகி வழிபாடு குறித்தே, மூன்றாம் காண்டம். பெரிதும் சிறப்பாகக் கருத்தில் கொண்டுளது. இவ்வழிபாடு குறித்த அறிகுறி ஏதும், இந்தியாவில் எங்கும் காணப்படவில்லை: இலங்கையில் அது இன்னமும் ஓரளவு நடைமுறையில் உளது. அந்நாட்டு பெளத்த சமயம், அதற்கு, ஓரளவு இடம் கொடுத்துளது. தென்னிந்தியாவில், இதற்கு மாறாக, இங்கு அங்கு என எண்ணாதபடி எங்கும் பரவியிருக்கும் ஒரே பத்தினி வழிபாடு, கண்ணகி வழிபாடு அன்று: காளியின் ஒரு கூறாக மதிக்கப்பெற்று, ஐவர்க்கும் மனைவியாயினும் சிறந்த பத்தினியாக மதிக்கப்படும் திரெளபதியாக ஒன்றுபடுத்திக் கொள்ளப்பட்ட, சிற்றுார்க் காவல் தெய்வத்தின் பழைய வழிபாட்டு முறையின் திருந்திய முறையே ஆம். ஆகவே, சிலப்பதிகாரத்து மூன்றாம் காண்டம், திரெளபதி வழிபாட்டு நெறிக்குப் போட்டியாகக், கண்ணகி வழிபாட்டு நெறியை நுழைக்கும் நிறைவேறா முயற்சியினைக் காட்டுகிறது என்பது நம்பக் கூடியதே.

மேலும் ஆராய்ச்சி தேவை

ஈண்டுக்கூறிய அனைத்தும், சில்ர்க்கு அதிலும் குறிப்பாக, உண்மையில் நனி மிக அண்மைக் காலத்தனவாய பாயிரம், கட்டுரை உரைபெறு கட்டுரை உரைகள் ஆகியவற்றில், கூறப்பட்டிருப்பனவற்றோடு, சிலப்பதிகார மூலத்தில் கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு கூற்றையும் வேதவாக்காகவே மதிக்கும் ஒரு சிலர்க்குக் குறைகாணும் நோக்கோடு மேற்கொண்ட திறனாய்வு முடிவுகளாகத் தோன்றக் கூடும். ஆனால், நான் கூறியிருக்கும் தற்காலிகமாகக் கொள்ளத்தகும். இக்கருத்துக்கள் அந்நூலை, இக்காலத்திறனாய்வு நெறிப்படி ஆய்வு செய்தற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்; சிலப்பதிகார மூலத்தில் கூறப்பட்டிருப்பனவற்றையும், பாயிரத்தில் கூறப்பட்டிருப்பனவற்றையும் மணிமேகலையில் கூறப்பட்டிருப்பனவற்றோடு ஒன்று கலப்பதன் மூலம் மணிமேகலையைப் பாடியவராகக் கருதப்படுபவரும், சிலப்பதிகாரத்து இறுதிப் பேரழிவு நிகழ்வுற்றபோது