பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

31


வகையில், பெரும்பாலும், பதிப்பித்து வெளியிடப்படாதனவாய ரேனாடு கல்வெட்டுக்கள், அவற்றுள் ஒன்று முன்பே எடுத்துக் காட்டப்பட்டது. அம் மாவட்டத்தைக், கரிகாலன் வெற்றி கொண்டது, அவன் காடுகளை அகற்றியது, நகரங்களைத் தோற்றுவித்தது. நீர்ப்பாசன முறைகளை வகுத்தது, அவன் வழி வந்தவர்களாகிய, தெலுங்கு பேசும், சோழ அரச இனத்தைத் தோற்றுவித்தது ஆகியவற்றிற்குச் சான்று பகர்கின்றன. “கி.பி. 640இல் சீன யாத்திரீகன் ஹயான் ஸ்வாங் காலத்தில், இத்தெலுங்கு ஆவணங்களை நாம் கண்டெடுத்த நிலப்பகுதியில், “சூ-வி-யெ” (chw-li-ye) என்ற பெயருடைய நாடு இருந்திருப்பது, கி. பி. ஏழாம் நூற்றாண்டில், இந்நாடு இருந்தது என்பதற்குத் தெளிவான சான்று ஆகும்”. (Ep. Ind. Vol. XI Page : 344) இவ்வரச இனத்துச் செப்பேடுகளில், புண்ணிய குமாரனின் மாலேபாடு செப்பேடுகள், “இந்தியக் கல்வெட்டுக்கள்” , பதினோராம் தொகுதியில் (Ep: Ind. Vol, XI) வெளியிடப்பட்டுள்ளன. கரிகாலன் ஆட்சிக்குப் பிற்பட்ட காலத்தில், இவ்வினத்து அரசர்கள், காஞ்சிப் பல்லவர்களுக்கு அடங்கியவராயினர். பின்னொரு காலத்தில், அவ்வரச இனம் மறைந்துவிட்டது: “அவர்களில் சிலர் பல்லவ நாட்டின் வட பகுதியை வென்று கைக்கொண்ட மேற்குச் சாளுக்கியர்களுக்கு அடங்கியவராயினர். இவ்வினத்தோடு உறவுடைய ஒரு பிரிவினர், நாகவம்ஸ் அரசன் ஜக்தேக பூஷணன் (கி. பி. 1080-1061) ஆட்சியின் கீழ்ச், சக்கர கோடத்தில், பணியினைத் தேட, மேலும் வடக்கு நோக்கிப் பயணம் மேற்கொண்டதாகத் தெரிகிறது”. (சென்னை கல்வெட்டு அறிக்கை: ஆணடு 1909 : பக்கம் : 112 (Madras Ep. Report for1909 : Page 112) மத்திய மாகாணத்துக் கோண்டு அரச இனம் இவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.) பன்னிரண்டு, பதின்மூன்றாம், நூற்றாண்டுகளில், குண்டூர், நெல்லூர், வட ஆர்க்காடு, கடப்பை, செங்கற்பட்டு மாவட்டங்களில் வாரங்கள் காகத்திற்கறளுக் கடமைப்பட்டவராகிய இப்போது தெலுகு சோட(Telugu coda) எனத் திரிந்து வழங்கும்