பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402

தமிழர் வரலாறு

ஆயிரம் விரித்து எழு தலையுடை அருந்திறல்
பாயல் பள்ளிப் பலர் தொழுது ஏத்த
விரிதிரை காவிரி வியன் பெரும் துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்”

—சிலம்பு : 1.1 : 35-40.

“புகழ்மிக்க அருவி நீரை உடைய வேங்கடம் என அழைக்கப்படும் மலையுச்சியில், ஞாயிறும் திங்களும் இரு பக்கங்களிலும் ஒளி விட்டுக்கிடக்க, இடைப்பட்ட பகுதியில், நல்ல நீல நிறம் வாய்ந்த மேகம் மின்னலாகிய ஆடையுடுத்து வில்லாகிய அணி பூண்டு நின்றதுபோல, பகை அழிக்கும் சக்கரத்தையும் சங்கையும், அழகிய தாமரைக் கைகளில் வலனும் இடனுமாக ஏந்தி, அழகிய ஆரத்தை மார்பில் பூண்டு, பொன்னாலாம் பூவாடை உடுத்து செங்கண்மாலாம் நெடியோனின் நின்ற திருக்கோலம்.’”

“வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை,
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடைநிலைத்தானத்து
மின்னுக் கோடி உடுத்து விளங்குவில் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்,
பகை அணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணம்”

—சிலம்பு : 1.1 : 41-51.

சிலப்பதிகாரத்தில் உள்ள சீரங்கத்திலும், வேங்கடத்திலும் உள்ள தெய்வத்திருமேனிகளின் இவ்வருணனை அச்சிலப்பதிகாரம், தொகைநூல்களில் மிகப்பழைமை