பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 300க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

403

வாய்ந்தனவான நான்கு தொகை நூல்களில் உள்ள பழம் பாடல்களோடு, சமகாலத்தது என்ற கூற்றினை அறவே மறுத்து விடுகிறது. கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவனைப் பரணர் பாடியுள்ளார்; மூன்றாம் காண்டத்தைப் பாடியவராகக் கருதப்படும் இளங்கோவடிகளார், அக்காவியத்துக்குரிய ஏனையரோடு, அக்கடல் பிறக்கோட்டிய வேல்கெழுகுட்டுவனாகவே கருதப்படும் செங்குட்டுவனையும் பாடியுள்ளார் என்ற இச்செய்திகளின் அடிப்படையில்தான் சமகாலத்தது என்ற அக்கூற்று நிற்கிறது, ஆனால், வேங்கட மலையை, அதன் மீது உள்ள திருக்கோயில் பெரும் புகழ் பெற்று விட்ட பின்னர்ப் பாடுவார் எவரும், அக்கோயிலைக் குறிப்பிடாமல் பாடுவது இயலாது என்பது உண்மையாகவும், பரணரோ, அல்லது, உண்மையில் அவரோடு சமகாலத்தவர்களாய பிற புலவர்களோ, வேங்கடத்தைத், தன் உச்சியில் அத்தகு புகழ் பெற்ற கோயிலைக் கொண்டிருப்பதாகப் பாடவில்லை. ஆகவே, சிலப்பதிகார ஆசிரியர், அவர் யாராக இருப்பினும், பரனரைக் காட்டிலும் காலத்தால் மிகவும் பிற்பட்டவராதல் வேண்டும். ஆரிய விஷ்ணுவை வழிபடும் திருக்கோயில்கள், தமிழ்நாட்டில் எழுந்து விட்டது மட்டுமல்லாமல், மிகப்பெரிய புண்ணிய இடங்களாக, அவை பெரும்புகழ் பெற்று விட்ட காலத்தில் வாழ்ந்தவராதலும் வேண்டும்.

பரணர் போல்வார் பாடவில்லை என்பது போலும், இல்லாமையை அடிப்படையாகக் கொண்டு செய்யும் வாதம் வலுவற்ற ஒன்றுதான் என்றாலும், அதைப் பிற சான்றுகளோடு கொண்டு நோக்கும்போது, அதற்கும் சிறிது வலு ஏற்றப்படுகிறது.

தமிழ்நாட்டின் வடஎல்லையைக் குறிப்பிடும்போது, சிலப்பதிகார ஆசிரியர், விஷ்ணுவுக்குரிய மலை எனும் பொருளில் “நெடியோன் குன்றம்” (சிலம்பு : 8 : 1) எனக் குறிப்பிடும் அளவு, சிலப்பதிகார காலத்தில், வேங்கடத் திருக்கோயில் புகழ் பெற்றுத் திகழ்ந்தது. நெடியோன்