பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

404

தமிழர் வரலாறு

 குன்றம் என்ற அத் தொடர், அக் கோயில், சிலப்பதிகாரக் காலத்தில் பெற்றிருந்த அத்துணைப் பெரும்புகழை, அகநானூற்றுப் புலவர்கள் காலத்திலும் பெற்றிருந்திருந்தால் அதுபோலும் ஒரு வருணனை அப்புலவர்களின் உள்ளத்திலிருந்து தப்பியிருக்கும் என்பதை நம்புவது அரிதாகுமளவு, அத்துணை இயல்பாக எழுந்துள்ளது.

சிலப்பதிகாரச் சொல் நடை, பழைய தொகை நூல்களின் செய்யுள் நடையினும் நவீனமானது; பழம்பெருஞ் சொற்களைக் குறைவாகவே கொண்டுளது என்பதை உணர்த்துகிறது என்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கதாம்; இக்கால மக்கள், பண்டைத் தொகை நூல்பாக்களினும், இக் காவியத்தைப், பெரும் இடர்ப்பாடு இல்லாமலே புரிந்து கொள்வது இயலும் என்பதும் உண்மை, மணிமேகலை, மேலும் அண்மைக் காலத்ததாகவும், சொல்லளவில், இக் காலத்தவர்க்குச் சிலப்பதிகாரத்தைக் காட்டினும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் காணப்படுகிறது:

இப் பகுதியை முடிக்கும் முன்னர், தற்காலிகக் கருத்தாம் என, நான் தொடக்கத்தில் கூறிய சிலப்பதிகாரம் முதல் இரு காண்டங்கள், நனிமிகச் சிறந்த ஒரு வீரகாவிய நூலாக மூன்றாவது காண்டம், தானே கற்பித்துக் கொண்ட ஒரு வீரனின் வெற்றிப் பெருஞ்செயல்கள் பற்றிய கற்பனைக் கதை நூலாக இரு வேறு ஆசிரியர்களால் இயற்றப் பெற்ற இருதனி நூல்களைக் கொண்டதாம் என்ற என் முடிவினைத், திரும்பவும் வற்புறுத்திக் கூற விரும்புகின்றேன்; அதை வரலாற்று மூலமாகக் கொள்வது, பொசிமியா நாட்டு நில இயல் நூலுக்கு சேக்‌ஷ்பியரின் நாடகங்களை ஆதாரமாகவும், மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம் என்ற நூலை, வரலாற்றுக்கு