பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

408

தமிழர் வரலாறு

“கொற்கை வேந்தே வாழி! தென்னப் பொருப்பின் தலைவ வாழி! தென்வை வாழி! பஞ்சவ வாழி !” எனப் பாண்டியரைப் பொது வகையால் குறிக்கும் பெயர்களைக்கூறி வாழ்த்தியதற்கிடையே, “செழிய வாழி !” என அவன் இயற்பெயர் கூறி வாழ்த்த வைத்து, அக்காலை அரசாண்டவன் பெயர் செழியன் என்பதை வாயிற்காவலன் வாயில் வைத்தும் விளக்கியுள்ளார்.

“செழிய வாழி தென்னவ வாழி !”

—20. வழக்குரை காதை . 32.

“பார்ப்பார் அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்”

மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டுத் தீத்திறத் தார் பக்கமே சேர்க” எனக் கண்ணகியால் ஏவப்பட்ட, அக்கினியின் எரிநாக்கு எவ்விட்த்தையும் பற்றி அழிக்கவும், மதுரை மாநகரைக் காத்துநிற்கும் காவல் தெய்வம், தம் கடமையை மறக்கவும். மதுரை மன்னன், கண்ணகிக்குச் செய்த கொடுமையால் வளையாத செங்கோல் வளைந்து விட்டது பொறாது, அரச மாதேவியோடு அரசு கட்டிலில் இறந்தது அறியாத காரணத்தால் ஆசான் முதலாம் ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் செயல் இழந்து நின்றது கூறும்பகுதியில், பாண்டியன் மன்னனுக்குச் செழியன் என்றே பெயர் சூட்டியுள்ளார் இளங்கோவடிகளார்.

ஏவல் தெய்வத்து எரிமுகம் திறந்தது,
காவல் தெய்வம் கடைமுகம் அடைத்தன,
அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன்
வளைகோல் இழுக்கத்து உயிராணி கொடுத்து ஆங்கு,
இரு நில மடந்தைக்குச் செங்கோல் காட்டப்
புரை தீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது
ஆசான், பெருங்கணி. அறக்களத்து அந்தணர்,
காவிதி,மந்திரக்கணக்கர் தம்மொடு,