பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



32

தமிழர் வரலாறு


தெலுங்குச் சோழ அரச குடும்பங்கள் வளம் பெற்றிருந்தன. (Madras Ep. Report for 1900 Page : 17) தங்கள் கால்வழியினைச் சூரியனிலிருந்து கண்டு, கரிகால சோழ அரசனை, அவர்களின் புராண வழி முன்னோர் வரிசையில் வைத்து எண்ணுகின்றனர். (Madras Ep. Report for 1900 : Page 106 : Page : 44) அனந்தபூர் மாவட்டத்திலும், கன்னட நாட்டு எல்லைப் பகுதிகளிலும் கூட, இச் சோழரின் ஒரு கிளை சிறப்புற்றிருந்தது. கி.பி. பதினாறாம் நூற்றாண்டு போலும் பிற்பட்ட காலத்திலும், வழிவழி வந்த காதுவழிச் செய்தியாம் கரிகாலன் வழிவந்தவர், பழைய பெருநகராம் உறையூரின் ஆட்சியாளர் என்ற பெருமையோடு, சோழர்குலம் படைத்தலைவர் சிலர், விஜய நகர அரசின் கீழ், மண்டலத் தலைவர்களாகப் பணிபுரியக் காணப்படுகின்றனர் (Ep. India Vol. XI Page 344) தெலுங்குமக்களின் வரலாற்றுத் தொடக்க காலத்தில், அத்தெலுங்கு மக்கள் சிந்தனைமீது, கரிகாலன் பொறித்துவிட்ட நல்லெண்ண முத்திரை, பெரும்பாலும். அனைத்துத் தெலுங்கு அரச இனங்களுமே, அவன் வழியில் வந்தவைாகவே உரிமை கொள்ளுமளவு, அத்துணைப் பெருமை வாய்ந்ததாம்.

கரிகாலனும் காவிரியும் :

இத்தெலுங்குச் செப்பேட்டு ஆவணங்கள், “கவேரன் மகளின்” (கா - ஏரி எனும் ஆறு) கரை கடந்து ஒடும் வெள்ளப் பெருக்கைத் தடுத்து நிறுத்திய கரிகாலன் பெருஞ் செயலைக் குறிப்பிடுகின்றன. (IP. India Vol. XI Page 339). காவிரி ஆற்றுக்குக் கரை கட்டினான் கரிகாலன் எனக் கூறுல், முதலாம் ராஜேந்திர சோழ தேவனின் ஆறாம் ஆண்டுத்: திருவாலங்காட்டுச் செப்பேட்டுத்தொடர்களில்,இத்தொடர்ப். (S. I. I. III: III Page: 386). காவிரி ஆற்றின் கடைமுகப் பகுதி, பண்டை நாட்களில், புனல் நாடு, அதாவது வெள்ளத்தின் நாடு எனப் பெயர். பெறுமளவு, காவிரியாறு நாடு முழுவதையும்.ஆண்டு தோறும். தவறாமல், வெள்ளக்காடாக்கி வந்துளது. உயர்ந்த வெள்ளத்