பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



29ஆம் அதிகாரத்தின் பின் இணைப்பு 2

பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தின் பாட்டுடைத் தலைவனாகிய குட்டுவன் வேறு : சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்துப் பாட்டுடைத் தலைவனாகிய செங்குட்டுவன் வேறு : என்பது சரியா?

சிலப்பதிகாரம் மூன்றாம் காண்டத்துப் பாட்டுடைத் தலைவன் செங்குட்டுவன்: நூலாசிரியர், இச் செங்குட்டுவனைப், பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து பாடிய பரணரின் பாட்டுடைத் தலைவனாகிய, கடல் பிறக் கோட்டிய குட்டுவனாகக் கொண்டு, அவன் பெருஞ் செயல்கள் அனைத்தையும், செங்குட்டுவனுக்கும் உரிமையாக்கியுள்ளார்: ஆனால், அவ்வைந்தாம் பத்துப் பாடல்களில், செங்குட்டுவன் என்ற பெயரோ, அவன் வடநாட்டுப் படையெடுப்போ குறிப்பிடப்படவில்லை ....... '‘குட்டுவன்'’, '‘சேரல்’' என்பன, சேரர் குலத்து அரசர் அனைவர்க்கும் வழங்கப் பெறும் பொதுவான பட்டப் பெயர்களாம், அவ்வரசர்களில் யாருக்கேனும் சிறப்புப் பெயர் இட்டு அழைக்க வேண்டின், சேரல்’', குட்டுவன்’' என்பனவற்றின் முன்னர், பெரும்'’, ‘'கடல்பிறக்கு ஒட்டிய’' என்ற சிறப்பு அடை மொழிகளை, முறையே கொடுத்துப், பெருஞ்சேரல்’, ‘'கடல்பிறக் கோட்டிய குட்டுவன்’' என் அழைக்கப்படும்: ஆக, அவ்வகையில் கடல் பிறக் கோட்டிய குட்டுவன், செங்குட்டுவன் என்பன இரண்டுமே, தனித்தனிச் சிறப்புப் பெயர்களாம். அவை இரண்டும் ஒருவனையே குறிக்கும்: என்பதாயின், ஒருவனே இரண்டு பெயர்களை மேற்கொண்டதாக ஆகும். அது, பண்டைக் காலத்தில் இல்லாத. வழக்கமாம் எனக் கூறிப், பதிற்றுப் பத்து ஐந்தாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் வேறு : வஞ்சிக் காண்டத்துப்