பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

413


படை காதை : 64) என்றும், குடவர் கோமான்'’ (நீர்ப். படை காதை: 227) என்றும் வந்துளது;

ஆக, சிலப்பதிகாரத்து வஞ்சிக் காண்டம், தன்பாட்டுடைத் தலைவன் பெயரை, எல்லா இடங்களிலும் செங்குட்டுவன் என்றே அழைத்துளது என்பதில் உண்மை இல்லை ; அது, அவனைக் குட்டுவன் என்றும் அழைத்துளது. பதிற்றுப்பத்து, ஐந்தாம்பத்து, 2, 3, 6, 7, 9 பாடல்களில், பரணர் அவனை, அப் பெயரிட்டு அழைத்துள்ளார் ; அக. நானுற்றுப் பாடல் ஒன்றிலும், அவனை அவன் முந்நீர் ஒட்டிய நிகழ்ச்சியோடு தொடர்புபடுத்திக், குட்டுவன் எனும் அப் பெயரிட்டு அழைத்துள்ளார்.

ஆகவே, பரணரின் பாட்டுடைத் தலைவனும், வஞ்சிக், காண்டத்துச் செங்குட்டுவனே ஆவன். ஆகவே, பதிற்றுப் பத்தில் அவனைச் செங்குட்டுவன் என அழைக்கப்படாயையால், அவன் சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்துப் பாட்டுடைத் தலைவனின் வேறாகிவிட மாட்டான்.

செங்குட்டுவன் பெருஞ் செயல்களாகப், பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துப் பதிகம், 1) ஆரிய அண்ணலை வீட்டிக் கடவுள் பத்தினிக்குக் கல் கொண்டது, 2) கன்றோடு, பல்லான் கொண்டு இடும் பின் புறத்து இறுத்தது, 3) வயவர். வீழ வியலூர் நூறியது, 4) கொடுகூர் எறிந்தது, 5) பழையன் வேம்பு துமியப் பண்ணி, பெண்டிர் கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டி சர்த்தது, 6) சோழர் குடிக்கு உரியோர் ஒன்பதின்மரை நேரி வாயிற்புறத்தில் வீழ்த்தியது, 7) கடல் பிறக்கு ஒட்டியது ஆகிய ஏழு நிகழ்ச்சிகளைக் கூறுகிறது.

அவன் பெருஞ்செயல்களாக, வஞ்சிக் காண்டம், 1) செங்குட்டுவன் தாயைக் கங்கை ஆட்டச் சென்றபோது கொங்கணர் முதலாம் ஆரிய மன்னர் ஆயிரவரைத் தனி ஒருவனாக நின்று வென்று அழித்தது. (காட்சிக் காதை : 156:164 ) ('நடுகல் காதை 126-121, 2) கண்ணகி சிலைக்குக்