பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

416

தமிழர் வரலாறு

ஒட்டியது, பழையன் வேம்பு தடிந்தது ஆகிய நிகழ்ச்சிகள் மட்டுமே நிகழ்ந்திருக்கக் கூடும்)

அதிலும், கடல் ஒட்டிய நிகழ்ச்சி, சேரர்க்குத் தொல்லை. கொடுத்து வந்த கடம்பரின் காவல் மரமாம் கடம்பை அழித்து, அக்கடம்பரை அடக்குவதற்கு முன்னர், அக். கடம்பருக்கு அரணாய் அமைந்திருந்த கடலைக் கடந்த நிகழ்ச்சியையே குறிப்பதாகும். இதுவும், செங்குட்டுவன் அரியணை ஏறிய பின்னர்த் தனித்து நின்று ஆற்றிய செயலாக இருக்காது. அக்கடம்பரை அழித்த அவன் தந்தையோடு, இளவரசராக இருந்த போது, கூடிச் செய்த செயலாதலே வேண்டும். நெடுஞ்சேரலாதன் கடம்பறுத்த நிகழ்ச்சி, “வலம்படு முரசின் சேரலாதன் முந்நீர் ஒட்டிக் கடம்பறுத்து,” “சால்பெருந்தானைச் சேரலாதன் மால் கடல் ஒட்டிக் கடம்பறுத்து’ என அகத்திலும் (127, 347), “நனி இரும்பரப்பின் மாக்கடல் முன்னி...பலர் மொசிந்து ஓங்கிய அலர் பூங்கடம்பின், கடியுடை முழு முதல் துமிய’, ‘மாக் கடல் நீக்கிக் கடம்பறுத்து’ எனப்பதிற்றுப்பத்திலும் (11,17) பாராட்டப் பெற்றிருப்பது காண்க. அதிலும் கடம்பறுத்த அச்செயல், முந்நீர் ஒட்டி’, ‘மால்கடல் ஒட்டி’, ‘மாக் கடல் முன்னி’, ‘மாக்கடல் நீக்கி’ என கடல் கடந்த நிகழ்ச்சியோடு தொடர்பு படுத்தியே பாராட்டப் பெற்றுளது காண்க. அது போலவே, தந்தைக்குத் துணையாய் நின்று, கடல் கடந்து கடம்பறுத்த குட்டுவன், தந்தை மறைவிற்கும் பின்னர், மேற்கொண்ட பெருஞ்செயல், பழையனைவென்று, அவன் வேம்பை வீழ்த்தியதாதல் வேண்டும். அது நிகழும் வரையே வாழ்ந்து, அவன் பெருமையுணர்ந்து கொண்ட பரணர், அவனைப் பாராட்டிப் பாடிய பதிற்றுப் பத்தும் வாக்களிலும், அக நானுற்றுப் பாவிலும், அவ்விரு. நிகழ்ச்சிகளை மட்டுமே கூறிப்பாராட்டியுள்ளார்.

செங்குட்டுவனின், ஏனைய பெருஞ்செயல்கள் எல்லாம், பரணர் மறைவிற்குப் பின்னர் நிகழ்ந்தன வாதல் வேண்டும்; ஆகவே, அவற்றைப் பரணர் பாடுவது இயலாது. ஆகவே