பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

33


தடுப்புக் கரைகளைக் கட்டியதன் மூலம், ஆண்டுதோறும், தவறாமல் நிகழும் இயற்கை விளைவிக்கும் அழிவினினின்றும், நாட்டைத் தெளிவுறக் காத்தான். குளம் வெட்டினான்: வளம், பெருக்கினான் (“குளம் தொட்டு வளம் பெருக்கி”. பட்டினப்பாலை 284) என்று மட்டுமே கூறும் பட்டினப் பாலையில், கரிகாலனின் இப்பெரும்பணி, சிறப்பிட்டுக் கூறப்படவில்லை. இப்பெரும் பணி, பிற்கால மக்களின் சிந்தனையைக் கவர்ந்த அளவு (உதாரணத்திற்கு: கலிங்கத்துப் பரணி ஆசிரியர்: பாட்டு: 184) அவனுடைய சமகாவப் புலவர்களின் சிந்தனைகளைக் கவர்ந்ததாகத் தெரியவில்லை; ஆனால், ஒன்றற்கொன்று தொடர்பிலவாய, தெலுங்கு தமிழ்ச் சிலா சாஸனங்களின் வரிசைகள் பலவும், இக்காது வழிச் செய்தியைச் சிறப்பாகக் குறிப்பிட்டிருப்பதால், காவிரிக்குக் கரை கட்டியது, கரிகாலனின் தொடக்க காலத்திய சிறிய பணியாம் என நாம் நம்பலாம். (பொருநராற்றுப் படையில், நுரைத்து ஒலிஎழுப்பிப் பாயும் புனலில், அது வரைப்பகத்தே பாயும் பகுதியில், மகளிர் நீராடுவர் எனும் பொருள் தருவதான, “நுரைத்தலைக் குரைப்புனல், வரைப்பகம் புகுந்தொறும் புனலாடு மகளிர்” (240 - 241)என்ற தொடர் வருகிறது. கடைசித் தொடருக்கு, உரையாசிரியர், குளமும், குட்டையும் எனப் பொருள் கொண்டுள்ளார். ஆனால், மகளிர், புது வெள்ளம் வரும் போது, ஆற்றில் தான் குளித்தனரேயல்லது, குளத்திலும், குட்டையிலும் குளிக்கவில்லையாகவே, “வரைப்பகம்” என்ற தொடர், ஆறு கரைகட்டித் தடுக்கப் பட்ட இடம் எனும் பொருள் உடையதாகக் கொண்டு, அத்தொடரில், மேலே விவாதிக்கப்பட்ட உண்மைச் செய்தியின் குறிப்பீட்டினைக் காணும் கருத்துடையேன் நான்:) முடத்தாமக் கண்ணியார், தம்முடய பொருநராற்றுப் படையின் கடைசிவரிகளில், “குனிந்துநின்று அரிவாளின் கூரிய வாயால், நெற்கதிர்களை அரிந்து, கதிர்க்கட்டுக்களை, மலைபோல அடுக்கி, நாள்தோறும் கடாவிட்டு, மேருமலை. போல் குவிந்த நெல், நெருங்கி அடுக்கிய மூட்டைகள்

த. வ. 11-3