பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



29ஆம் அதிகாரத்தின் பின் இணைப்பு-3

1. வஞ்சிக் காண்டம் இளங்கோவடிகள் பாடியதன்று ?

திருவாளர், பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் தம்முடைய தமிழர் வரலாறு என்ற ஆங்கில நூலில், (History, of the Tamils) ‘'சிலப்பதிகாரம் என்ற இந்நூல், மூன்று காண்டங்களாகப் பிரிக்கப் பட்டுளது. ஆனால், முதல் இரு காண்டங்கள் மட்டுமே, முற்றுப்பெற்ற முழு நூலையும் உருவாக்கி விடுகின்றன. சிலம்பின் நூல் எனப் பொருள் படுவதான சிலப்பதிகாரம் என்ற அந்நூல், ஊதாரித்தனமாகப் பொருளழிக்கும் கோவலன், வாணிகம், தொடங்க மனைவியின் காற்சிலம்பை விற்க முனைய, ஆனால், மதுரை மன்னனால் திருட்டுக்குற்றம் சாட்டப்பட்டுக் கொலையுண்டு போக, சினங்கொண்ட அவன் மனைவி கண்ணகி, கடுஞ்சினம் கொண்டு, மன்னனையும் அழித்துத் தன் முலையைத் திருகி மாநகர் மீது வீச, அதிலிருந்து எழுந்த தீ, அம்மாநகரை எரித்து அழிக்க, இறுதியில் கணவனும் மனைவியும் வானாடு அடைந்த கதையைக் கூறுகிறது. இக்கதை முதல் இரு காண்டங்களில் கூறப்பட்டுளது. ஆகவே, அவ்விருகாண்டங்கள் மட்டுமே முழுநூலாக முற்றுப் பெறுகின்றன. இரண்டாம் காண்டத்து இறுதியில், பாட்டுடைத் தலைவனும், தலைவியும், நில உலகிலிருந்தே பிரிந்து விடுகின்றனர்; சிலம்பின் கதையும் முடிந்து விடுகிறது, அதன் பின்னர், அவ்வணி பற்றி ஏதும் கேட்டிலம்.’’

‘'மூன்றாம் காண்டம், சேர அரசன் செங்குட்டுவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவன் புகழ், அவனுடைய வடநாட்டு வெற்றிப் படையெடுப்பு பற்றிக் கூறுகிறது. ஆகவே, அது, எக்காரணம் கொண்டும், சிலப்பதிகாரம் என அழைக்கப்படுதற்கு உரிமையுடையதன்று. முதல் இரு காண்டங்களாம் முழுநூலைப் பாடிமுடித்துவிட்ட