பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

421


ஆசிரியர், சிலம்பைத் தம் பார்வைக்கு அப்பால் போகவும் விடுத்துப், பாட்டுடைத் தலைவன், தலைவி ஆகிய இருவரையும் வானுலகிற்கு அனுப்புவதும் செய்து விட்ட பின்னர், செங்குட்டுவன் புகழ்பாடுவதையே தலையாய குறிக்கோளாகக் கொண்ட மூன்றாம் காண்டத்தை இணைத்து, காவிய நயத்தைக் கெடுத்து விடுவாரா என்பது ஆய்வுக்கு உரிய ஒன்று : அத்துணைப் பெரும் புலவராய அவர், தம் நுலை, அவ்வாறுகெடுத்துக் கொள்வார் என, நான் நினைக்கவில்லை.”

"சிலப்பதிகாரம், இரண்டு நூல்களைக் கொண்டது : ஒவ்வொரு நூலும் தனித்தனி ஆசிரியர்களால் இயற்றப் பெற்றவை : முதல் இரு காண்டங்கள், மிகச் சிறந்த ஒரு வீரகாவியம் : மூன்றவது காண்டம், கற்பனைத் தலைவனின் புகழ்பாடும் ஒரு கற்பனைக் கதை ,'’ என்றெல்லாம் எழுதி உள்ளார்.

“The poem is divided into three cantos, the scenes being laid respectively, at Pugar, Madurai and vanji But cantos 1 and 2 Constitute a finished poem. Silappadigaram, means, ‘ , "The Book on the Anklet”, and relates the story of a reformed prodigal, Kovalan, who proposed to sell his wife’s anklet, for setting up business, but was executed, on a false charge of theft, by the orders of the king of Madurai, where upon, the infuriated wife, Kannagi, cursed the king and screwed out one of her breasts and threw it at the town, and a fire springing from it burnt down the city. The husband and wife there on ascended to heaven, This story is narrated in the first two cantos, which there the constitute a complete poem At the end of the II canto, the hero and heroine depart from the earth and the story of the anklet ends and we