பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

422.

தமிழர் வரலாறு

 hear no more of the Jewel. So the name Silappadigaram can apply only to the first two cantos.

“The third canto has a sera king, Senguttuvan as its hero and it deals with the greatness of this monarch, and his victorious expedition to Northern India. ......Hence the third canto cannot with any appropriateness be called Silappadigaram the Book of the Anklet: It is a question worth investigation, whether the author, of the complete poem ie., the first and second cantos, after dismissing the anklet from his purview and despatching his hero and heroine to heaven, deliberately ruined the unity of his Epic, by adding a third canto, whose chief object was to glorify Senguttuvan. I do not think, such a great artist would have thus spoilt his own poem.

“The Silappadigaram is a double poem, each poem’ by a different author, Cantos I and II being a spleinded romantic poem, and Canto III, being a legend about a mythical hero’s exploits.” -

-—History of the Tamils. Pages: 597, 598, 606:

மதுரைக் காண்ட முடிவில், சிலம்பும் தம் கண்ணை விட்டுப் போய் விடுகிறது . கண்ணகி கோவலனும் வானுலகு அடைந்து விடுகின்றனர் ; ஆகவே, கதை, அத்துடன் முடிந்து விடுகிறது. -

புகார்க் காண்டம், மதுரைக் காண்டம் இரண்டோடு சிலப்பதிகாரக் கதை முடிந்து விடுகிறது. ஆகவே அவை இரண்டும் ஒரு நூலாகி விடுகிறது : வஞ்சிக் காண்டத்தை அவற்றோடு இணைப்பது முறையற்றது என்பதற்கு அவர் காட்டும் காரணங்களுள் தலையாயது இது. அவர் காட்டும் வேறு காரணங்களாவன :