பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600 க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

427


பாசண்டன்பால் பாடு கிடந்தாட்கு
ஆசில் குழவி அதன் வடிவாகி
வந்தனன்; அன்னை! 'நீ வான் துயர் ஒழுகு’ எனச்
செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கிப்
பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பால்
காப்பியத் தொல்குடிக் கவின் பெற வளர்ந்து
தேவந்திகையைத் தீவலம் செய்து
நாவீராண்டு நடந்ததன் பின்னர்
மூவா இளநலம் காட்டி என் தோட்டத்து
நீவா என்றே நீங்கிய சாத்தன்.

-வரந்தருகாதை : 74-87.

இம்மூன்று தவிர்த்து, இயற்கை யொடு பெருந்தா நிகழ்ச்சியாக, வேறு எதுவும் இடம் பெற்றிலது. இவற்றில் முதலாவதும், மூன்றாவதும், வஞ்சிக்காண்டத்தில் மட்டுமே கூறப்பட்டவை அன்று : இவை, முறையே மதுரைக் காண்டம். கட்டுரைக் காதையிலும், புகார் க்சாண்டம் கனாத் திறம் உரைத்து காதையிலும் கூறப்பட்டுள்ளன.

"அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு
வானவூர்தி ஏறினள் மாதோ
கானமர் புரிகுழல் கண்ணகி தான் என்’'

-கட்டுரைக் காதை . 197 - 200.

மாலதி மாற்றாள் மகவுக்குப் பால் அளிக்கப்
பால்விக்கிப் பாலகன் தான்சோர மாலதியும்
..............................................................................................
மஞ்ஞை போல் ஏங்கி அழுதாளுக்கு அச்சாத்தன்
அஞ்ஞை ! நீ ஏங்கி அழல் என்று முன்னை
உயிர்க்குழவி கானாய் என்று அக் குழவியாய் ஒர்