பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600 க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

429


2) கூனர், குறளர், ஊமையர், செவிடர், தொழு நோயாளர், தன்னிடைமூழ்கி எழுவராயின், அவர் தம் நோய் போக்கி, அவர்களை அழகுடையவராக்கும் குளம். “கூனும், குறளும், ஊமும், செவிடும். அழுகு மெய்யாளரும் முழு நீராடிப் பழுதில் காட்சி நன்னிறம் பெற்று, வலஞ்செயர்க் கழியும் இலஞ்சி.” (மேற்படி 118-121).

3) நஞ்சுண்டு ஒடுங்குவார், அரவு கடித்து நஞ்சேறப் பெற்றவர், பேயால் பிடிக்கப் பட்டுப் பெருந்துயர் உறுவோர், ஒருமுறை வலம் வந்து தொழ, அத்துயர் தீர்க்கும் ஒளியைக் காலும் கல்கட்டம். “நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர், அழல்வாய் நாகத்து ஆரெயிறு அழுந்தினர், சுழல் கண் கூளிக் கடுநவை மட்டோர், சுழல வந்து தொழத் துயர் தீர்க்கும் நிழல்கால் நெடுங்கல்” -௸ : 123-127.

4) தவவேடம் மேற்கொண்டு, அதற்குப் பொருந்தா அவமே மேற்கொண்டு ஒழுகும் பொய்வேடதாரி, கண்வர் நம்புமாறு நடித்து பொய்யொழுக்கம் மேற்கொள்ளும் பெண்டிர், தம்மிடம் நம்பிக்கை வைத்துள்ள அரசர்க்கு அவர் அறியாது. அவர் அழிவுக்கு வழிதேடும் அறை போகு அமைச்சர், பிறர் மனை நயப்போர், பொய்ச்சான்று கூறுவோர். புறங்கூறுவோர் ஆகியோரைக் கைக்கொள் பாசத்தால் கொண்டு, காதம் நான்கும் கேட்கக் கடுங்குரல் எழுப்பிப் புதைத்து உண்ணும் பூதம்.

‘தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறைபோகு அமைச்சர், பிறர் மனை நயப்போர்,
பொய்க்கரியாளர், புறங்கூற்றாளர் என்
கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எழுப்பிப்

பூதம் புடைத்து உணும்’–மேற்படி:128-182