பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



34

தமிழர் வரலாறு


இல்லாத வெற்றிடம் சிறிது இல்லையாம்படி, எங்கும் கிடப்பதற்குக் காரணமாம்படி, செந்நெல் விளையும் வரப்பு கட்டின ஒருவேலி பரப்புள்ள நிலம், ஒராயிரம் கலம் விளையு ஊரக" என்க் கூறியுள்ளார்.

“கூனிக் குயத்தின் வாய்நெல் லரித்து,
சூடு கோடாகப் பிறக்கி, நாள்தொறும்
குன்றெனக் குவை இய, குன்றாக் குப்பை கடுந்தெற்று மூடையின் இடம்கெடக் கிடக்கும் சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாக’’.

                  -பொருநராற்றுப்படை : 242 - 47

மிகப் பெரிய இவ்விளைவு, கரிகாலன், காவிரியின் வெள்ளத்தைத் திட்டமிட்டு முறைப்படுத்தியிருந்ததினாலேயே பெறப்பட்டிருக்க முடியும். எடுத்துக் காட்டுக்களை எடுத்தாளும்போது, சில இடங்களில், பொருத்தமற்றனவற்றைக் காட்டிவிடும். திரு. வி. கன்கசபைப்பிள்ளை அவர்கள், காவிரியிலிருந்து பாசனத்திற்கான தண்ணீர் வழங்க, கரிகாலன், மதகுகளையும், கால்வாய்களையும் கட்டினான் எனக்கூறி, (ஆயிரத்து எட்டு நூறு ஆண்டுகளுக்கு முந்திய தமிழர் பக்கம் : 68) அதற்கு ஆதாரமாக, சிலப்பதிகாரம், காதை 10, வரிகள் 108-111ஐக் கொடுத்துள்ளார். அவர் குறிப்பிடும் அவ்வரிகள் ‘கடல் அலைகள் பொங்கி எழுவது அதிகமாகும் போது, காவிரியின் புதுவெள்ளம். அது கடலோடு கலக்கும் வாய்த்தலையிலிருந்து பின்னோக்கி எழத், தண்ணீர், பாசனக் கால்வாய்களுள் ஓயாது ஒலித்தவாறே உட்புகும்” என்ற பொருளைத் தான் தருகின்றனவேயல்லது, கரிகாலனின் பெருஞ்செயல் எதையும் குறிப்பிடவில்லை;

"கடல் வளன் எதிரக், கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஒவிறந்து ஒலிக்கும்”. சிலம்பு 10:107-109