பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

431


காட்டுவழிப் போவாரை மடக்கித் துன்புறுத்தும் தெய்வம்: "வயந்தமாலை வடிவில் தோன்றி...பாத்தரும் பண்பு! நின்பணிமொழியாதெனக் ... கோவலன் நாவிற்கூறிய மந்திரம் பாய்கலைப் பாவை மந்திரம் ஆதலின், வனசாரணியான், மயக்கம் செய்தேன் : புனமயில் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும் என் திறம் உரையாது ஏகு என்று ஏக” (காடுகாண் காதை : 173-200)

11) புண்தாழ் குருதி புறம் சோர, வெட்டுண்டு, இறந்து வீழ்ந்து கிடந்த நிலையில், வந்து அழுது ஏங்கி நிற்க, பழுது ஒழிந்து எழுந்திருந்து எழுது எழில் மலர்உண் கண்ணாய்! நீ, ஈண்டே இருப்பாயாக என ஆறுதல் உரைக்கும் கோவலன்,

‘’அழுதேங்கி நிலத்தின் வீழ்ந்து ஆயிழையாள் தன் கணவன்
தொழுதகைய திருந்தடியைத் துணை வனைக்கையால் பற்ற
பழுதுஒழிந்து எழுந்திருந்தான் பல்அமரர் குழாத்துளண்
எழுதெழில் மலர் உண்கண் இருந்தைக்க எனப்போனான்"
-ஊர்சூழ்வரி : 64-67:

12) கள்வனோ என் கணவன் என்ற கண்ணகி வினாவிற்குக், கள்வன் அல்லன் என விடைகூறும் காய்கதிர்ச் செல்வன்.

காய் கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன்?
கள்வனோ அல்லன், கருங்கயற்கண் மாதராய்
ஒள்ளெரி உண்ணும் இவ்வூர் - துன்பமாலை 51.53;

13) கண்ணகி முன் தோன்றி, இவ்வூரை எரியால் அழிக்கும் பணி, எனக்குப் பண்டே உண்டு. ஆயினும் சங்கு யார் யாரை எரிக்காது காக்கவேண்டும் எனக் கேட்டு, கண்ணகி, பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி ஆகியோரைக் கைவிட்டுத் தீயோரை