பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

432

தமிழர் வரலாறு

மட்டுமே அழிப்பாயாக என ஆணையிட அவ்வாறே அழித்து ஏவல் கேட்கும் எரிக் கடவுள்.

“மாலைஎரி அங்கி வானவன் தான்தோன்றி,
மாபெரும் பத்தினி நின்னை மாணப் பிழைத்தநாள்
பாய்எரி இந்தப் பதியூட்டப் பண்டே ஓர்
ஏவல் உடையேனால், யார் பிழைப்பார்? சங்கு என
பார்ப்பார் அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்
மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கு என்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகை அழல் மண்டிற்றே

நற்றேரான் கூடல் நதர்.”
—வஞ்சின மாலை : 49-57,

14) கண்ணகியின் முன் வருதற்கு அஞ்சி, அவனைப் பின்தொடர்ந்தவாறே சென்று மறை ஒதும் அந்தணர் தம் தாவோசையல்லது, வலியரால் மெலிவெய்தி முறைகேட்க வருவார் எழுப்பும் மணிஓசை கேட்டு அறியார்; தம் அடிபணிய மறுக்கும் பகைவர் பழிதாற்றக் கேட்பதல்லது, தன்குடிமக்கள் பழிதுாற்றக் கேட்டறியார் எனப் பாண்டியர் பெருமையினையும், முற்பிறவியில் செய்த தீவினையால், வந்துற்ற கேடுஇது எனக் கண்ணகியின் பழம் பிறப்பினையும் உணர்த்தும் மதுராபுரித் தெய்வம், “முன்நிலை ஈயாள், பின்நிலைத் தோன்றி... மாபெரும் கூடல் மதுராபதி என்பேன்.....மறை நா ஓசை அல்லது, யாவதும் மணிநா ஓசை கேட்டதும் இலனே; அடிதொழுது இறைஞ்சா மன்னர் அல்லது, குடிபழி துாற்றும் கோலனும் அல்லன்.....விழுவோள் இட்ட வழுவில் சாமம் பட்டனிர்” (கட்டுரை காதை:16-170.)

முதல் இரு காண்டங்களில், இயற்கையொடு பொருந்தாச் செய்திகள், இவை போல்வன, இன்னும் பலப்பல.