பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

434

தமிழர் வரலாறு


(காட்சிக் காதை . 160-164) ஆகவே அவ்வழி, செங்குட்டுவன் பண்டே அறிந்தவழி. ஆகவே கண்ணகி சிலைக்காக, அவன் அவ்வழியில் மீண்டும் செல்லும்போது, அவனுக்கு வழிகாட்டத் தேவையில்லை. ஆகவே தான் இளங்கோவடிகளார், அவ்வழிகளைப் பாடவில்லை!

மேலும், இன்னார் பாடியிருந்தால், இதையெல்லாம் பாடியிருப்பார் : அவையெல்லாம் பாடப்பெறவில்லை : ஆகவே அவர் பாடியிருக்க இயலாது என்ற வாதமும்; முறையான வாதம் ஆகாது.

ஆக, வஞ்சிக் காண்டம், இளங்கோவடிகளார் பாடிய தன்று என்பதற்கு, அய்யங்கார் கூறும் இக்காரணமும் பொருத்தமான காரணம் ஆகாது.

இனி, பெளத்தர்களால் பரப்பி விடப்பட்ட போன பிறவிபற்றிய கட்டுக் கதைகள், வஞ்சிக் காண்டத்தில் எண்ணிலாதன. ஆகவே, வஞ்சிக் காண்டம், இளங்கோவடிகள் பாடியதன்று என்பது திரு. அய்யங்கார் கூறும் பிறிதொரு காரணம்.

இதிலும் உண்மையில்லை : போன பிறவி பற்றிய கட்டுக் கதைகள், அவர் கூறுவது போல், வஞ்சிக் காண்டத்தில் எண்ணிலாதன, இடம் பெற்றிருக்கவில்லை . மாறாக, ஒரேயொரு நிகழ்ச்சி மட்டுமே இடம் பெற்றுளது.

கண்ணகி விழாக் காணவந்திருந்த இளமகளிர் மூவர் மீதும் கரக நீர் தெளிக்க, அவர்க்குப் போன பிறவி நினைவுக்கு வரவே, அவர்களுள், அரட்டன் செட்டி மகளிர் இருவரில் ஒருத்தி, ‘புதுமண வாழ்க்கையில் புகழ்ந்த காதலன், பின்னர்ப் போற்றா ஒழுக்கம் கொண்டது அறிந்து வருந்திய என்னையும் பாராது, வேற்று நாட்டில், வேறு துணை இன்றிக் காதலனோடு கடுந்துயர்க்கு உள்ளான என் மகளே! வருக.-- “புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின் இகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய் ஏதில் நன்னாட்டில்.யாருமில்