பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

455

ஒரு தனிக் காதலன் தன்னொடு கடுந்துயர் உழந்தாய: யான் பெருமகளே!” (வரந்தரு காதை : 98 - 102) என்னும், மற்றொருத்தி, “நம் மனையில் என்னோடிருத்த கண்ணகியாம். நங்கை நல்லாளை இடையிருள் யாமத்து உடன் கொண்டு சென்றதற்கு வருந்துகிறது என் நெஞ்சம், அது யான் பொறேன். மகனே! வருக!”— “என்னோடிருந்த இலங்கிழை நங்கை தன்னோடு இடையிருள் தனித்துயர் உழந்து, போனதற்கு இரங்கிப் புலம்புறும் நெஞ்சம் : யான் அது பொறேன் : என் மகன்! வாராய்!” (வரந்தரு காதை : 104 - 107). என்றும் வாய்விட்டுப்புலம்பி, தாம், போன பிறவியில், முறையே, கண்ணகி தாயாம், கோவலன் தாயாம் என்பதை உணர்த்தினர் : அது போலவே சேடக்குடுமியின் சிறுமகள், “வையை ஆற்றிலிருந்து, ஊர்க்குறு மாக்கள் கூறுவன் கேட்டு வந்த யான், மனையில் உன்னைக் காணேன்: என் தாயே எங்கு ஒளித்தனையோ?”

’வருபுனல் வையை வான்துறைப் பெயர்ந்தேன்,
உருகெழு மூதூர் ஊர்க்குறு மாக்களின்
வந்தேன் கேட்டேன் மனையில் காணேன்:
எந்தாய்! இளையாய்? எங்கொளித்தாயோ?”

—(வரந்தரு காதை . 108 - 111).

எனப்புலம்பித், தான், போன பிறவியில் ஆயர்முது மகள் மாதரியாம் என்பதை உணர்த்தினாள்.

போன பிறவி கூறும் நிகழ்ச்சி, வஞ்சிக் காண்டத்தில், இது ஒன்று தவிர்த்து வேறு இல்லை. திரு. அய்யங்கார் அவர்கள் கூறுவது போல, எண்ணிலாதன இடம் பெற்றிருக்க வில்லை : போன பிறவி அறிந்து கூறும் நிகழ்ச்சி, வஞ்சிக் காண்டத்தில் மட்டுமே இடம் பெற்றுளது: எனக்கூறுவதற்கும் இடம் இல்லை. மதுரைக் காண்டத்திலும் இடம் பெற்றுளது: வஞ்சிக்காண்டத்தில் உள்ளது போல் ஒன்று அன்று : இரண்டு. இடம் பெற்றுள்ளன.