பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

436

தமிழர் வரலாறு

 தவமுதல்வன் ஒருவன், எட்டிசாயலன் மனைவி படைத்த உணவை உண்ணும்போது வந்து, உண்டு ஒழித்ததை உண்ட குரங்கை, உன் மக்களில் ஒன்றுக் கொள்க எனத்தவ முதல்வன் பணிக்க, அவன் அது ஏற்று, அக்குரங்கின் தீவினை அறுக எனச்செய்த தானத்தின் பயனாய், மத்திம தேசத்து அரசனுக்கு மகனாய்ப்பிறந்து சிறந்துற்ற நிலையிலும், தனக்கு இப்பிறவி வாய்க்க, முற்பிறவியில், சாயலன் மனைவி செய்த அறமே காரணமாதலை மறவாதிருத்தற் பொருட்டு, ஒரு கையை குரங்குக் கையாகவே கொண்ட - குரங்கின் மறுபிறவி, அடைக்கலக் காதையில் இடம் பெற்றுளது: (151 - 189.)

போன பிறவியில், உன் கணவனாம், கோத்தொழில் புரியும் பரதன் என்பான், சிங்கபுரத்து வாணிகன் சங்கமனை, ஒற்றன் எனக்கூறிக் காவலன் முன் கொண்டு நிறுத்தக் கொலை செய்யப் பெற்ற அச்சங்கமனின் மனைவி நீலி என்பாள், அத்துயர் பொறுக்கமாட்டாது ஏழுநாள் அலைந்து இறுதியில், இது செய்தார், வரும் பிறவியில் இதுவே பெறுக என இட்ட சாபத்தால், பெற்றீர் இப்பெருங்கேடு என, கண்ணகி கோவலன் முற்பிறவிக் கதையை, மதுரா புரித்தெய்வம் கூறுவது கட்டுரைக் காதையில் இடம் பெற்றுளது. (149-170)

ஆக, வஞ்சிக்காண்டம், சிலப்பதிகாரத்தின் ஒரு பகுதியாகாது என்பதற்கு, அவ்வஞ்சிக் காண்டத்தில் முற்பிறவி, அறிந்து கூறும் நிகழ்ச்சி எண்ணற்றன இடம் பெற்றுள்ளதாகத் திரு அய்யங்கார் கூறும் காரணமும் பொருந்தாது என்பது இதனால் தெளிவாகும்.

ஆக, வஞ்சிக் காண்டம், இளங்கோவடிகளால் பாடப் பெற்றதன்று ; வேறு யாரோ ஒருவரால் பாடப்பெற்ற, செங்குட்டுவன் புகழ்பாடும் தனிநூல் என்பதற்குத் திரு: சீனிவாச அய்யங்கார் கூறும். 1) கோவலனையும் கண்ணகியையும் வானாட்டிற்கு அனுப்பி வைப்பதோடு கதை. கமுடிந்து விடுகிறது . அது முதல் இரு காண்டங்களுக்கு.