பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

438

தமிழர் வரலாறு


எதிர்த்த ஆரிய அரசர் பலரையும், தான் ஒருவனாகவே நின்று வெற்றி கொண்டது.

தன்நாட்டு எல்லைக்கண் வாழ்ந்து, தன் நாட்டு அமைதியைக் குலைத்து வந்த கொங்கரையும், அவர்க்குத் துணைவந்த சோழ பாண்டியரையும் கொங்கர் செங்களத்தில் ஒருசேர அழித்து, அக்கொங்கர் தலைநகராம் கொடுகரை அழித்தது.

சேரநாட்டுக் கடற்கரைக்கு அணித்தாக உள்ள தீவினை இடமாகக் கொண்டு, சேரநாடு வந்து செல்லும் வணிகக் கலங்களைக் கொள்ளையிட்டு வந்தார் செயலால் சினங் கொண்டு, கடற்படை கொண்டு அவர்தம் கடல் அரணை அழித்து, அவரையும் வென்று அடக்கியது.

மோகூர்ப் பழையன் மாறன் எனும் பெருவீரன்பால் பெற்ற தோல்விக்கு நாணி, எங்கோ சென்று தலைமறைவாகி விட்ட, தன் ஆருயிர் நண்பன் அறுகைக்கு நேர்ந்த பழியினைத் துடைப்பான் வேண்டி, அம்மோகூர்ப் பழையன் மீது படையெடுத்துச் சென்று, ஆங்குச் சோழனும், பாண்டியனும் ஆகிய பேரரசர்களும், குறுநில மன்னர்களாம் வேளிர் பலரும் அப்பழையனுக்குத் துணைநிற்கும் நிலையிலும், அப்பழையனை வென்று, அவன் காவல் மரமாம் வேம்பினை, வெட்டி வீழ்த்தியது.

கடற்கரை நகராம் வியலூரில், புவிநிகர் வீரர் பலரை. அழித்து வெற்றி கொண்டது.

சோழ நாட்டில், தன் மைத்துனன் ஆட்சியில் அமர்ந்தது பொறாத அவன் தாயத்தார் ஒன்மதின்மர். அவனுக்கு, எதிராகக் கிளர்ந்தெழுந்து, நாட்டின் அமைதி கெடுத்த ஆழி தொழில் புரியத் தலைப்பட்டனராக அஃதறிந்து, அவர்கள் ஒன்பதின்மரையும் நேரிவாயில், எனும் இடித்தே எதிர்க் கழித்து, சோழநாட்டின் அமைதி காத்தது,