பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29ஆம் அதிகாரத்தின் பின் இணைப்பு-4

                          திருவள்ளுவர் காலம்

திருவள்ளுவர்க்குக், கி.பி.ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நூற்றாண்டை உரிமை ஆக்க இயலாது. [Thiruvalluvar cannot be assigned to any century earlier than the VI.] History of the Tamils: Page:588.)

இது திருவாளர் பி. டி., சீனிவாச அய்யங்கார் அவர்களின் முடிவு. இதற்கு அவர் காட்டும் முதல் காரணம் இது: திருவள்ளுவர் காலத்துக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில், ஒழுக்க நெறி கூறும் பாக்கள் இடம்பெறவில்லை; ஆகவே, அவர் சமஸ்கிருத மொழி சாஸ்திரங்களிலிருந்து பெருவாரியாக கடன் வழங்கியுள்ளா்.[The author (Thiruvalluvar) borrowes freely from Sanskrit Sastras, for, in the Tamil literature, before Thiruvalluvar*s time, didactic poetry did not exist” (Page: 587.)]

மலைக்காடுகளில், எதிர்கால எண்ணமே இல்லாமல், கிடைத்தன உண்டு. கண்ட இடத்தில் உறங்கி வாழ்ந்தி மக்களினம், இன்றைய நாகரீக நிலையை அடைய எத்தனையோ படிக்கட்டுக்களை ஏறி வந்துளது. அப்படி முன்னேறிய ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளில், தங்கள் வாழ்க்கை செம்மையுற அமைதற்பொருட்டு, அவ்வப்போது, தனக்குள்ளாகவே, சிலபல கட்டுப்பாடுகளை வகுத்துக்கொண்டு. வந்துளது. இவ்வாறு அவ்வப்போது வகுத்துக்கொண்ட கட்டுப்பாடுகளின் தொகுப்பே, மக்களின் வாழ்க்கை சட்டங்களாயின. அத்தகைய வாழ்க்கைச் சட்டங்கள், எல்லாம், பல்வேறு தலைப்புகளில் முழுவடிவைப் பெறுவதற்கு, முன்னர், அம்மக்கள் வாழ்க்கையிடையே நிகழ்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில், அந்நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்களின்