பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள் 441

உரையாடல்களில் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் ஆக, இலைமறை காயாக இடம் பெற்று வந்தன. இவ்வாறு பலநூறு ஆண்டு காலம் பல்வேறு நிலைகளில் இடம் பெற்று வந்த பல்வேறு வாழ்க்கைச் சட்டங்களையெல்லாம், பல்வேறு அறிஞர் பெருமக்களால், தொகுக்கப்பெற்று அற நூல்களாகவும், பொருள் நூல்களாகவும் வடிவம் பெற்றன. இது எல்லா மக்களுக்கும் எல்லா நாட்டவர்க்கும் எல்லா மொழி யாளர்க்கும் பொதுவிலக்கணமாம், இதைத், திருவாளர் பி. டி. எஸ். அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளார்.

அர்த்த சாஸ்திரங்கள், தர்ம சாஸ்திரங்கள், மோக்கூடி சாஸ்திரங்கள்; இப்பொருள் குறித்த பழைய கொள்கை ஆய்வுகள் இவை மறைந்து போகும் அபாயத்திலிருந்து, பாரத வீரகாவியத்தில், பற்றற இணைக்கப்பட்டு, அதன் நாடக பாத்திரங்களின் உரையாடல்கள் என்ற வகையில், அக்கதையில் பின்னப்பட்டுப் புதிய வாழ்வுரிமை பெற்றவை: ஆய்வு செய்து முழுவடிவம் பெற்ற பிற்காலக் கொள்கை விளக்கம் போல் அல்லாமல், இச்சாஸ்திர முடிவுகளெல்லாம், ஏறத்தாழ உருவம் அற்றவை.” Artha Sastras Dharma Sastras, and Moksa Sastras. These. were ancient treatises on these subjects, which were in danger of extinction and acquired a new lease of life by being welded into the Epic and woven in to its story as dialogues of its acters. The treatises were more or less amorphous and not like the finished products of later times.” Page 881 என அவர் கூறுவது காண்க. - ‘

தமிழ் மொழிக்கும் இது பொருந்தும் எனல் கூறாதே கொள்ளப்படும். தமிழில் திருக்குறள் எழுவதற்கு முன்ன்ர். வட்மொழி இராமாயண பாரதம் பெருங்கதைகள் போலும், ஒரு சிலரின் வாழ்க்கையினைக் கூறும் பெரு நூல்கள் இல்லை எனினும், மக்களின் அகப்புற வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை விளங்கக் கூறும் பாக்கள் எழாமல் போய்விட வில்லை. அத்தகைய பாடல்கள் எண்ணில் அடங்கரதள