பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள் 442

                இணையான குறள் :
             உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்; 
              கடையரே கல்லா தவர்.’ -593 

மேலும், ‘பாஅல் புளிப்பினும் என்பது போலும் அறிவுரைகளை அரசர்க்கு உணர்த்தி, அதன் காரணத்தால், *செவியறிவுறுாஉ’ எனும் துறையினவாகக் கருதப்படும், 2, 3, 5, 6, 35, 40, 65 எண்ணிட்ட புறநானூற்றுப் பாடல்களும், அது போலவே, ‘உண்டா லம்ம இவ்வுலகம்’ என்பது போலும் அறிவுரைகளை அரசர்க்கு உணர்த்தி அதன் காரணத்தால் பொருண்மொழிக் காஞ்சி அல்லது வாயுறை வாழ்த்து எனும் துறையினவாகக் கருதப்படும்; 182 முதல் 193, மற்றும் 195, 214 எண்ணிட்ட புறநானூற்றுப் பாடல்களும் ஒழுக்க நெறி உணர்த்தும் பாடல்களே:

- இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்பதே மரபு. தொல்காப்பியர், கைக்கிளை என்ற அகத்திணையின் புறத்தினையாகிய பாடாண்திணைக்கு உரிய பல்வேறு துறைகளுள், வாயுறை வாழ்த்து, செவியறிவுறுஉ என்ற இவ்விரண்டையும் கொண்டு, (தொல் : பொருள் புறத்தினண 87) வேம்பும், கடுவும் போலும் கசப்பும், கார்மும் கலந்த சொற்களால் அல்லாமல், இதுசெய்தால், இது கிடைக்கும் என, எதிர்கால நலனை நினைவூட்டிக் காக்கும், இனிய நயமான சொற்களால் அறிவூட்டுவது வாயுறை வாழ்த் து: என்றும்,

              வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் 
              வேம்பும் கடுவும் போல, வெஞ்சொல் 
              தாங்குதல் இன்றி, வழிநளி பயக்கும் என்று 
              ஒம்படைக் கிளவியின் வாயுறுத் தன்றே’
                                      -(தொல், பொருள். செய்யுள் : 417)

நடுவுநிலை பிறழாமல் நிற்பதும், எந்நிலையிலும், யார் மாட்டும் வெகுளாமல், நம்மைக்காத்தே நிற்பதும் பெரியவ.