பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

、446 தமிழர் வரலாறு

ராயினாரின் கடன் என அவர்தம் காதுகளுக்கு அறிவுறுத்துதல் செவியறிவூறு உ என்றும், அவற்றிற்கு இலக்கணமும் வகுத்துள்ளார்.

                         ‘செவியுறை தானே
                          பொய்முதல் இன்றிப் புரையோர் நாப்பண் 
                          அவிதல் கடன் எனச் செவியுறுத்தன்றே”
                                             - -தொல் பொருள் : செய்யுள் : 4 19:

இவ்வாறு இலக்கணம் வகுத்தார் தொல்காப்பியர் என்றால், அதற்குத் துணைபுரிய, அவர் காலத்திற்கு முன்னர், அத்தகைய பாடல்கள் எண்ணற்றன. வழக்காற்றில் இருள் திருக்கவேண்டும். இதுவே, இலக்கிய இலக்கண மரபாகும். இதைத் திருவாளர். பி. டி. எஸ். அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார். “அகஸ்தியர்க்கு முன்னர் எண்ணற்ற ‘புலவர்கள் வாழ்ந்து பாக்கள் புனைந்திருக்க வேண்டுமில்லையேல், அகஸ்தியர், பாக்கள் பற்றிய இலக்கணத்தை இயற்றி இருக்க முடியாது ("There must have been numerous poets before the time of Agastya, for he could not other wise have composed grammar of poetry” (Page : 219). Er Grs &G.FGL,எனக் கூறியிருப்பது காண்க, -

ஆக, கி. பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னர் அல்லாத முற்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகத் திரு. பி. டி. எஸ். அவர்களால் கூறப்படும், (தமிழர் வரவாறு: பக்கம் 70. தொல்காப்பியத்தில், ஒழுக்க நெறி உணர்த்தும் பாடல்களுக்கு இலக்கணம் கூறப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு இலக்கியமாய் அமைந்த பாடல்கள், அக்காலத்துக்குச் சில நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்தாவது வழக்காற்றில் இருந்திருக்க வேண்டும். ஆகவே, தமிழ் இலக்கிய உலகில் ஒழுக்க நெறி உணர்த்தும் பாக்கள், கி. மு. இரண்டு அல்லது முதல் நூற்றாண்டு கேத்லயதிரே இருந்திருக்க வேண்டும்: