பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள் 447.

ஆகவே, ஒழுக்க நெறி உணர்த்தும் பாடல்கள், தமிழ் மொழியில், திருவள்ளுவர் காலத்துக்கு முன்னர்ப் பாடப் படவில்லை 1 ஆகவே, அவர், தம் நூலுக்கு ஆன கருப் பொருட்களை, மனுதர்ம சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம் போலும் வடமொழி நூல்களில் தேடிப் பெறவேண்டிய தாயிற்று என்ற முடிவிக்கு வந்து, அது காரணம் கொண்டு, அவர் காலத்தைக் கி. பி. ஆறாவது நூற்றாண்டில் கொண்டு வந்து நிறுத்தும், திரு. பி. டி. எஸ். அவர்களின் முடிவு ஏற்புடையதாகாது.

‘திருவள்ளுவர், அறத்துப் பாலில், மனுவின் தர்ம சாஸ்திரத்தையும், பொருட்பாலில், கெளடல்யரின் அர்த்த சாஸ்திரத்தையும் logōtl , fiħ joqgir«rrrif.— ••Thiruvailuvar follows mainly, in his Arappal, the most popular Dharma Sestra of Manu, and in his Porutpal, the well known Artha Sastra of kautalya” (Påge: 590) ، :

திருவள்ளுவரைக் கி. பி. ஆறாம் நூற்றாண்டில் கொண்டு வந்து நிறுத்துவதற்குத், திரு. பி. டி. எஸ். அவர்கள் காட்டும் இரண்டாவது காரணம் இது. இம்முடிவிற்கு வந்துவிட்ட அவர்கள், அதை உறுதி செய்ய, திருக்குறள் கூறும் கருத்துக் களுக்கும். மனுதர்ம, அர்த்த சாஸ்திரங்கள் கூறும் கருத்து களுக்கும் உள்ள ஒருமைப் பாட்டினை விளக்க, குறட்பாக்கள் சில்வற்றை எடுத்துக் கொண்டு, அவை கூறும், கருத்துக்கு நிகரான கருத்து கூறும், சமஸ்கிருத சுலோகங்கள் சிலவற்றை எடுத்துவைத்து ஒப்புக் காட்டியுள்ளார். (பக்கம் : 592-395):

உலகம் போற்றும் எந்த ஒரு அறிஞனும், ஒரு பொருள் பற்றிய நூலினை எழுதும் போது, அவன் காலத்தில் வழக்கில் இருக்கும், அதே பொருள்கூறும் நூல்கள் அனைத்தையும், அவை, தான் அறிந்த வேற்றுமொழியில் இருப்பினும், அவை அனைத்தையும், பழுதறக் கற்று, அவற்றுள் ஏற்படின் ஏற்று, மறுப்பன மறுத்து, இறுதியாகத், தான் உண்மையெனக் கொண்ட பொருட்களை மட்டுமே மையமாகக் கொண்டு தன் நூலை அளிப்பன்.