பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இ48 தமிழர் வரலாறு 448

இந்நெறி நின்று, தம் காலத்து நூல்கள் அனைத்தையும், தமிழ் நாட்டிற்கு அப்பால் உள்ள நாடுகளின் வழிக்காற்றில் இருந்த பெருநூல்கள் அனைத்தையும் கற்றவர் திருவள்ளுவர் என்பதில் ஐயம் இல்லை. இஃது உண்மையாதல், பின்வரும் அவர் குறட்பாக்களால் உறுதியாதல் காண்க:


                   “ஒழுக்கத்து நீத்தார் பெருமை, விழுப்பத்து
                    வேண்டும், பனுவல் துணிவு’ -213
                    “யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை. எனைத்
                    வாய்மையின் அல்ல. பிற’, ~300
                    “பகுத்துண்டு பல் உயிர் ஒம்புதல், நூலோர்
                     தொகுத்தவற்றுள் எல்லாம் தலை,” —433.
                    “பொச்சாப்பார்க்கு இல்லை, புகழ்மை: அது உலகத்து,
                     எப்பால் நூலோர்க்கும் துணிவு’ —533.
       “நிறை மொழி மாந்தர் பெருமை, நிலத்து மறைமொழி காட்டிவிடும் (28), மறப்பினும் கொளலாகும் ஒத்து’ (134). என்ற குறள்கள், வள்ளுவர், வேதங்களை உணர்ந்தவர். என்பதையும், ‘புறம் கூறிப்பொய்த்து உயிர் வாழ்தலின், சாதல், அறம் கூறம் ஆக்கம் தரும்.’’ (183), பிறன் பொருளாள் பெட்டொழுகும் பேதைமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார்கண் இல்’ (141) என்ற குறட்பாக்கள், அவர் மனுநீதி சாஸ்திரம் போலும் அற நூல்களையும், அர்த்த சாஸ்திரம் போலும் பொருள் நூல்களையும் படித்து அறிந்தவர் என்பதையும் உறுதி செய்கின்றன. 

திருவள்ளுவரின் இயல்பு இதுவே என்பதைத் திருக்குறளுக்கு வழக்காற்றில் உள்ள அனைத்து உரைகளிலும், தலைசிறந்த உரையினை அளித்துள்ள பரிமேலழகர்,