பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி, பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள் 449

                   “எல்லா நூல்களிலும் கல்லன எடுத்து, எல்லோர்க்கும்
                    பொதுப்படக் கூறுதல் இவர்க்கு இயல்பு’ (323 உரை.)

எனக் கூறுவதன் மூலம் உறுதி செய்திருப்பதும் காண்க

ஒருவர், தம் காலத்தில் வழக்கில் இருக்கும் நூல்களைக் கற்றறிவது வேறு : தாம் எழுதும் ஒரு நூலுக்கு அந்நூல்களை முதல் நூலாகக் கொள்வது வேறு. திருவள்ளுவர், தம்காலத்தில் இருந்த நூல்களையெல்லாம் கற்றுத் தெளிந்தவர் என்பது உண்மை ; ஆனால், அந்நூல்களே. அவர் நூலுக்கு முதல் நூல்கள் ஆயின என்பது உண்மையன்று,

திருக்குறள், ஒரு முதல் நூலே அன்றி, வழிநூல் அன்று, முதல் நூலாவது யாது ? வழி நூலாவது யாது என்பதற்கு இலக்கணம் வகுத்துள்ளார் தொல்காப்பியர், நல்வினை தீவினைகளைக் கடந்து உயர்ந்தவனும், ஐயம் திரிபு அற்றுக் தெளிந்த பேரறிவாளனுமாகிய முழு முதல் தலைவன் இயற்றியது முதல் நால்.

                வினையின் நீங்கி, விளங்கிய அறிவின்
                முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்.';
                                       -தொல் : பொருள் : மரபு ; 96;

அந் நூலை முதல் நூலாகக் கொண்டு இயற்றப்படும் நூல்களெல்லாம் வழி நூல்களாம் ; அவை நான்கு வகைப்படும்: விரிவாகக் கூறியிருக்கும் முதல் நூல் பொருள்களைச் சுருக்கிக் கூறுவது சு ரு க் க ம க க் கூறியிருக்கும் முதல் நூல் பொருள்களைப், பின்வருவோர் எளிதில் விளங்கிக் கொள்வான் வேண்டி, விரித்துக் கூறுவது முதல் நூலில் தொகுத்துக் கூறவேண்டியனவற்றைத் தொகுத்தும், விரிக்க வேண்டியன வற்றை விரித்தும், ஆக இரண்டையும் ஒருங்கே கொண்டு இருப்பது : ஒருமொழியில் இருப்பதை வேறு ஒரு மொழியில் தருவது ஆக வழி வில்கள் நான்கு வகைப்படும்.

                       ‘ வழிஎனப் படுவது அதன்வழித் தாகும்.’
                                                            த.வ.ll-29