பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

457


claimed for this King the credit of subjugating all the kings of India, marching with his army straight to the top of the Himalayas stamping his crest thereon and on the return march receiving tributes, after hostilities or other wise, from three great Northern monarches. A Napoleonic march from the extreme south of India to the top of the Himalayas is an inconceivably difficult feat in any period of Indian History, Moreover, the contemporary, eulogist of Karikal Uruttiran Kannanar, does not mention it and does not mention any conquest of Karikal beyond Renadu. The Telugu inscriptions which systematically mention all Karika’s achievements, do not allude to it. I there fore hold that the statements of the author of silappadigaram are inventions. It is not impossible that Karikal got the three articles as presents from some body or other, but that he marched up to the Himalayas is clearly a late legend. Page : 369). இது அவர் திறனாய்வின் முடிவு.

கரிகாலன் இமய வெற்றி உண்மை நிசழ்ச்சி அன்று என்பதற்குத் திரு. அய்யங்கார் கூறும் காரணங்களுள் முதலாவது, இந்தியாவின் தென்கோடியிலிருந்து, இமாலயத்தின் உச்சி வரையான, ஒரு நெப்போலியப் படையெடுப்பு, இந்திய வரலாற்றின் எந்தக் காலத்திலும் எண்ணிப் பார்க்கவும் இயலாத ஒர் அருஞ்செயலாகும் என்பதாம். செங்குட்டுவனின் வடநாட்டு வெற்றி குறித்து, திரு அய்யங்கார் எழுப்பும் வினாவிற்கு அளிக்கும் விடையே இதற்கும் பொருந்தும். அது அங்கே விரிவாகக் கூறப்பட்டுளது; ஆங்குக் கண்டுகொள்க.

இரண்டாவது காரணம் கரிகாலன் சமகாலப் புலவராம் உருத்திரங்கண்ணனார், கரிகாலன் புகழ்பாடும் தம்முடைய பட்டினப்பாலையில் இதைக் குறிப்பிடவில்லை என்பது. கரிகாலன் புகழ் பாடியவர், உருத்திரங்கண்ணனார் ஒருவர் மட்டும் அல்லர். பொருநராற்றுப்படை என்ற பிறிதொரு