பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

458

தமிழர் வரலாறு


நெடிய பாட்டின் மூலம், கடியலூர் முடத்தாமக்கண்ணியாரும் அகம் : 1.25, 246 மூலம் பரணரும், புறம் : 65 மூலம் கழாத்தலை யாரும், புறம் : 66 மூலம் வெண்ணிக் குயத்தியாரும், அகம் : 55 மூலம், மாமூலனாரும் என வேறு ஐம்பெரும் புலவர்களும், அவன் புகழ் பாடியுள்ளனர்; இவர்களும் கூட, கரிகாலனின் இமயப் படையெடுப்பு குறித்துப் பாடினார் அல்லர்.

அவர்கள் பாடவில்லை என்பதினாலேயே, இமயப் படையெடுப்பு நடவாத ஒன்று எனத் தள்ளி விடுதல்கூடாது: கரிகாலன் பெற்ற வெற்றிகளுள், மிகப்பெரியது வெண்ணிப் போர்வெற்றி; இவ்வெற்றியைப் பரணர் பாடியுள்ளார்: அகம்: 246. மாமூலனார் பாராட்டியுள்ளார். அகம் : 855 கழாத்தலையார் பாராட்டியுள்ளார்: புறம் : 65. வெண்ணிக் குயத்தியார் இழித்துப் பாடியுள்ளார்: புறம் : 66. முடத்தாமக்கண்ணியார் பாராட்டியுள்ளார். பொருநராற்றுப் படை : 1.43.148. ஆனால் கரிகாலன்பால் பதினாறு , நூறாயிரம் பொன் பரிசாகப் பெற்ற பெருமைக்குரிய பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், ஐம் பெரும் புலவர்கள் பாராட்டும் அப்போர் குறித்து ஒரு வரிதானும் கூறினாரல்லர். அவர் கூறவில்லை ஆகவே, வெண்ணிப் போர் நடவாத ஒன்று எனத் தள்ளிவிடுதல் வரலாற்று நெறியாகுமா? தள்ளிவிட்டாரா, திருவாளர் அய்யங்கார்? இல்லை; ஏற்றுக் கொண்டுள்ளார்; கரிகாலன் வரலாறு எழுதிய அவர், அவன் செயலாக, வெண்ணிப்போர் வெற்றியையே, முதற்கண் எடுத்து விளக்கியுள்ளார் : (335-337 பக்கங்கள் காண்க.)

கரிகாலன் பெற்ற மற்றுமொரு வெற்றி, வாகைப் பறந்தலையில் நடைபெற்ற போரில், பகையரசர் ஒன்பதின்மரை வெற்றி கொண்டு, அவர்தம் கொற்றக் குடைகள் ஒன்பதையும், நண்பகற் போதிற்குள்ளாகவே கைப்பற்றிக் கொண்டதாம். இவ்வாகைப் போர்வெற்றியைக், கரிகாலன் புகழ்பாடுவார் அனைவரும் கூறியுள்ளனரா