பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

459


என்றால் இல்லை. பரணர் ஒருவர் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அகம் : 125,

பரணர் ஒருவர் மட்டுமே கூறியுள்ளார்; ஏனையோர் கூறவில்லை எனப் புறக்கணித்துவிடுவது வரலாற்று நெறியாகுமா? ஆகாது; திரு. அய்யங்கார் அது செய்துள்ளாரா என்றால், இல்லை. ஏற்றுக் கொள்ளவே செய்துள்ளார். வெண்ணி, வாகைப் போர்கள் குறித்துத், திரு. அய்யங்கார் அவர்கள், “போர்க் களத்தில், இரு பெரு வேந்தர்களோடு, குறுநிலத்தலைவர்கள் பதினொருவரும் இருந்தது கரிகாலனின் சமகாலப் புலவர்களால் குறிப்பிடப் படவில்லையாயினும், அது காதுவழிச் செய்தியின், ஒரு சிறு உண்மைக் கூற்று ஆகும். கரிகாலன் தமிழ் நாட்டைத் தன் ஆட்சிக் கீழ்க் கொண்டுவந்த பெரு நிகழ்ச்சிகளில், ஒருசிறு நிகழ்ச்சியான, சேரநாட்டைச் சேர்ந்த வாகைப் போர்க் களத்து, ஒரு நாள் போரில், ஒன்பது குறுநிலத் தலைவர்களின் தோல்வி பற்றிய செய்தியும், காது வழிச் செய்தியின் ஒருசிறு உண்மைக் கூற்றே ஆகும்.” [The presence and defeat of eleven petty chiefs, in the battle of venni, besides the two kings, is perhaps a gennine bit of tradition, though not mentioned by the the previous poets, who were the contemporary of Karikal Solan. So too is the account of the defeat of nine petty chiefs in the ceuese of one day in the battle of Vagai, one of the petty incident in the course of Karika’s subjugation of the Tamil country. Page : 365, 366 ) என அவர் கூறுவது காண்க.

ஆக, கரிகாலன் இமயப் படையெடுப்பைப் பரணர்போலும் புலவர்கள் பாராட்டவில்லை என்ற காரணம் காட்டி, நிகழாத நிகழ்ச்சியாகக் கொண்டு தள்ளிவிடும் திரு. அய்யங்கார் முடிவு, வரலாற்று மரபுக்கு ஒவ்வாது முடிவே ஆகும்.

கரிகாலனின் இமய வெற்றியை ஏற்பதற்கில்லை என்பதற்குத் திரு. அய்யங்கார் காட்டும் மூன்றாவது காரணம், ‘கரிகாலனின் அத்துணை அருஞ் செயல்களையும் முறைப்