பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

461


உண்மை நிகழ்ச்சியாகக் கொள்வது கூடாது என்பதற்குத் திரு. அய்யங்கார் கூறும் காரணங்கள், பொருந்தும் காரணங்கள் ஆகா என்பது தெளிவாக்கப்பட்டது.

கரிகாலனின் இமய வெற்றி, உண்மை நிகழ்ச்சி என்பதை உறுதிசெய்யும் வலுவான கல்வெட்டுச் சான்று ஒன்றும் கிடைத்துள்ளது. திருவாளர், மு. இராகவ அ ய் ய ங் கார் அவர்கள் 1932ஆம் ஆண்டுக் கலைமகள் இதழின் முற்பகுதி 62, 63, பக்கங்களில், அச்சான்றினை அளித்துள்ளார் : அவர் கூறுவது வருமாறு :

‘'வச்சிர நாடு என்பது, சோணை (Soni) நதி சூழ்ந்த தேசமாகும், அதனை அடுத்துள்ளதே மகதநாடு ; இது கங்கையடுத்த பிரதேசம் என்பது தெரிந்ததே. அவ்விரு நாட்டரசரையும் வென்ற பின்பே, அவந்தி வேந்தனிடம் நட்பு முறையில் அவ்வளவன் சென்றவன் என்று, இளங்கோவடிகளார் குறிப்பிடுகிறார். இவற்றால், வச்சிர, மகத நாடுகளை அடுத்து, அவற்றின் வடபக்கத்தில் உள்ள இமயப் பகுதியே சோழன், தன் அடையாளத்தை நாட்டிய இடமாகும் என்பது நன்கு விளங்கும்.

“இவ்வாறு இமயப் படையெடுப்பு, சோழன் தலைமையின் கீழ்த் தமிழரசரால் ஒரு காலத்து நிகழ்ந்தது என்ற வரலாற்றைப், புதியதாகத் தெரியவரும் அரிய செய்தி ஒன்றும் ஆதரித்து நிற்பதை இனிக்கூறுவேன். மேலே நான் கூறியவற்றையெல்லாம் ஒரு சேரக்கொண்டு நோக்குமிடத்து, திருமாவளவன் சென்றுவந்த இமயமலை, இப்போது விக்கிம் பூட்டான் என்ற இராஜ்யங்களுக்கு இடையில் உள்ள மலைப் பகுதியே ஆதல் வேண்டும்; என்னெனில், இப்பகுதியிற்றான். வங்காளத்துள்ள டார்ஜிலிங்கிலிருந்து திபெத்துக்குச் செல்லும் கணவாய்கள் உள்ளன. இக்கணவாய்களில் சில, முற்காலத்தும் இக்காலத்தும் வியாபாரப் போக்கு வரத்துக்கு உரியனவாய் அமைந்தனவாகும். இவைகளும் பலமாதங்கள் வரை பணி முடப்பெற்று அடைப்பட்டுக் கிடத்தலால், சில காலங்களே, அப்போக்கு வரத்துக்கு ஏற்றனவாகின்றன......வங்காள