பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

466

தமிழர் வரலாறு


(சிலம்பு: கட்டுரை : 81 : நடுகல் : 185) ஆகிய வரிகள், அக்கடம்பர், கடலிடைச் சிறு நிலத்தை ஆண்டு வந்தவர் என்பதையும், சேரலாதன் கடற்படை க்ொண்டே அவர்களை வென்று, அவர்தம் காவல் மரமாம் கடம்பை வெட்டி வீழ்த்தினான் என்பதையும்,

“வரைமருள் புணரி வான்பிசிர் உடைய
வளிபாய்ந்து அட்ட துளங்கிரும் கமஞ்சூல்
ஒளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி.....
.......................
பலர் மொசிந்து ஓம்பிய அலர்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய வேஎய்
வென்றெறி முழங்கு பணை செய்த”

(பதிற்றுப்பத்து 11)

“துளங்கு பிசிர் உடைய மாக்கடல் நீக்கிக்
கடம்பறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை”

- பதிற்றுப்பத்து 17:

“மால்கடல் ஒட்டிக் கடம்பறுத்து இயற்றிய
பண்ணமை முரசு”

-அகம் : 347 . மாமூலனார்

ஆகிய வரிகள். சேரலாதனின் கடற்செலவையும், ஆங்குக் கடம்பரை வென்று, வெட்டி வீழ்த்தி, அவர்தம் காவல் மரமாம் கடம்பு கொண்டு வெற்றி முரசு செய்து வீறு கொண்ட்தையும் கூறி, அக்கடம்பர். கடலிடையே உள்ள ஒரு சிறு நாட்டில் வாழ்ந்தவர்; அவர்களைச் சேரலாதன் வெற்றி கொண்டதைப் பலரும், பல்லாற்றானும் பாராட்டுமளவு பெருவீரராய்த் திகழ்ந்தவர் என்பதைத் தெளிவாக்கி இருக்கின்றன.

இவ்விளக்கம் அளிக்கும் அகச் சான்றுகளை அறிந்திருந்தும் அவற்றுள் சிலவற்றைத் தம்முடைய நூலில் எடுத்தாண்டிருந்தும். “நெடுஞ்சேரலாதன், சேரநாட்டின் எல்லைக்கு வடிக்கில் சில மைல் வரை, கடம்பர் நாட்டிலும், கொண்கானத்திலும் படையெடுத்துச் சென்று, சில வெற்றிப்-